முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டை வீழ்த்தியது எப்படி? – ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் கருத்து

Kuldeep-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கி இன்று நிறைவு பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கின்றனர்.

Shubman Gill

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 40 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸின் போதும் மூன்று விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் எட்டு விக்கெட் வித்திய அவர் முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 400 ரன்களை கடக்க முக்கியமான 40 ரன்கள் அடித்ததால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குல்தீப் யாதவ் இந்த போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினை பெற்று அசத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தான் சிறப்பாக விளையாடிய விதம் குறித்து பேசியுள்ள ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் கூறுகையில் :

Kuldeep Yadav 1

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த முதல் போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் நான் இந்திய அணிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

முதல் இன்னிங்சில் பந்து சற்று வேகமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் போது மைதானம் ஸ்லோ ஆனதால் பந்தின் வேகமும் குறைந்தது. எனவே முதல் இன்னிங்க்ஸை விட இரண்டாவது இன்னிங்சில் பந்து வீசுவது இன்னும் சவாலாக இருந்தது. அதோடு எனது பந்துவீச்சில் நிறைய டர்ன் இருந்ததால் பேட்ஸ்மேன்களால் எளிதில் இறங்கி வந்து அடிக்க முடியாது. கடந்த சில மாதங்களாகவே நான் எனது பந்துவீச்சு ரிதத்தில் அதிகமாக பயிற்சி செய்து வருகிறேன்.

இதையும் படிங்க : தெ.ஆ’வை தெறிக்க விட்டு ஆஸ்திரேலியா செய்த உதவி – தேடி வரும் அதிர்ஷ்டத்தை அள்ளுமா இந்தியா? விவரம் என்ன

என்னுடைய பந்துவீசும் ஸ்டைலை மாற்றவில்லை என்றாலும் ரிதத்துடன் அதிக ஆக்ரோஷத்துடன் பந்துவீச பயிற்சி எடுத்து வருகிறேன். அதனால் எனக்கு முன்பை விட நல்ல டர்ன் மற்றும் வேகம் கிடைக்கிறது என குல்தீப் யாதவ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement