தெ.ஆ’வை தெறிக்க விட்டு ஆஸ்திரேலியா செய்த உதவி – தேடி வரும் அதிர்ஷ்டத்தை அள்ளுமா இந்தியா? விவரம் என்ன

AUs vs IND
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த ஆஸ்திரேலியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸை 2 – 0 (2) என்ற கணக்கில் தோற்கடித்த தெம்பில் டிசம்பர் 17ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் பச்சை புற்கள் நிறைந்திருந்த காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடியான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கெய்ல் வேரின் 64 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவின் போராட்டமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ட்ரவிஸ் ஹெட் 92 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதன் பின் 66 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மீண்டும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 99 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது.

- Advertisement -

அதிர்ஷ்டமான வாய்ப்பு:
அதிகபட்சமாக ஜான்டோ 36* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 5 விக்கெட் சாய்த்தார். இறுதியில் 36 ரன்களை கட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு வார்னர் 2, கவாஜா 2, ஸ்டீவ் ஸ்மித் 5, டிராவிஸ் ஹெட் 0 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த ரபாடா வெற்றிக்கு போராடினாலும் இலக்கு குறைவாக இருந்ததால் 19 எக்ஸ்ட்ரா ரன்களை பயன்படுத்திய ஆஸ்திரேலியா 35/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பது மீண்டும் நிரூபித்துள்ளது. முன்னதாக இப்போட்டிக்கு முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த இவ்விரு அணிகளும் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

- Advertisement -

குறிப்பாக 2வது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இருப்பினும் இறுதியில் வென்ற ஆஸ்திரேலியா மொத்தம் 9 வெற்றிகளுடன் 120 புள்ளிகளை 76.92% என்ற சராசரியுடன் பெற்று புள்ளி பட்டியலில் தன்னுடைய முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. ஆனால் போராடி தோற்றத்த தென்னாப்பிரிக்கா 6 வெற்றி 5 தோல்வி உட்பட 87 புள்ளிகளை 54.55% என்ற சராசரியுடன் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. குறிப்பாக ஏற்கனவே 60% புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்த அந்த அணி 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

மறுபுறம் இப்போட்டியின் முடிவால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகம் அமைந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே 4வது இடத்தில் திண்டாடிய இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இலங்கையை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்கா அந்த இடத்திற்கு வந்து விட்டதால் 7 வெற்றி 4 தோல்விகளுடன் 87 புள்ளிகளை 55.77% சராசரியுடன் பெற்றுள்ள இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

- Advertisement -

தற்சமயத்தில் இந்தியாவுக்கு கீழே இருக்கும் அணிகள் தங்களது எஞ்சிய போட்டிகளில் வென்றாலும் டாப் 2 இடங்களுக்குள் வருவது கடினமாகும். எனவே அதிர்ஷ்டமான வாய்ப்பை பெற்றுள்ள இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேச தொடரை கைப்பற்றுவதுடன் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையை குறைந்தபட்சம் 3 – 0 (4) என்ற கணக்கில் வென்றால் ஃபைனலுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போகக்கூடிய 5 வெளிநாட்டு ஸ்பின்னர்கள் – லிஸ்ட் இதோ

ஒருவேளை 2 – 0 அல்லது 3 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்காவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பு மேலும் பிரகாசமாகும். எனவே தன்னுடைய எஞ்சிய போட்டிகளில் வென்று இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுமா என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement