ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போகக்கூடிய 5 வெளிநாட்டு ஸ்பின்னர்கள் – லிஸ்ட் இதோ

zampa
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் நிலையில் அதில் உலகம் முழுவதிலும் இருந்து 405 வீரர்கள் களமிறங்குகிறார்கள். பொதுவாகவே ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்ற நிலைமையில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் போன்ற நட்சத்திர ஆல் ரவுண்டர்கள் இம்முறை பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2022 (2)

- Advertisement -

அவர்களை போல டி20 கிரிக்கெட்டில் முக்கிய தருணங்களில் தங்களது மாயாஜால சுழலால் விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் ஸ்பின்னர்களுக்கும் ஐபிஎல் ஏலத்தில் எப்போதும் தனித்துவமான மவுசு உள்ளது. அந்த வகையில் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சில வெளிநாட்டு ஸ்பின்னர்களை பற்றி பார்ப்போம்:

5. அகில் ஹொசைன்: வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இடது கை ஸ்பின்னரான இவர் இதுவரை 25 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை 7.03 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார்.

குறிப்பாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களைக் கொண்ட இந்தியாவில் தாகத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட இவர் லோயர் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமையும் பெற்றுள்ளார். அதனால் தற்சமயத்தில் மும்பை, ஹைதராபாத் போன்ற ஸ்பின்னர்கள் இல்லாத அணிகள் இவரை பெரிய தொகைக்கு வாங்கலாம்.

- Advertisement -

4. முஜீப் உர் ரஹ்மான்: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் இதுவரை 36 டி20 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை 6.22 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 2018 சீசனில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 6.99 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் அடுத்த சில வருடங்கள் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார்.

mujeeb-ur-rahaman

2021 சீசனில் ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்டு வாய்ப்புகளை பெறாத அவரை 2022 சீசனில் எந்த அணியும் வாங்கவில்லை. இருப்பினும் உலகம் முழுவதிலும் நிறைய டி20 தொடர்களில் விளையாடி அனுபவமும் தரமும் கொண்டுள்ள இவர் இளம் வீரராக இருப்பதால் இம்முறை நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று நம்பலாம்.

- Advertisement -

3. சாகிப் அல் ஹசன்: வங்கதேசத்தின் ஜாம்பவானாக கருதப்படும் இவர் 2011 – 2019 வரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணியில் வெற்றிகரமாக விளையாடினார். இருப்பினும் 2020இல் தடையால் பங்கேற்க முடியாத அவர் 2021 சீசனில் மீண்டும் கொல்கத்தா அணியில் 3.20 கோடிக்கு விளையாடிய நிலையில் 8 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து சுமாராக செயல்பட்டார்.

Shakib

அதனால் கடந்த சீசனில் யாரும் வாங்கவில்லை என்றாலும் 109 சர்வதேச டி20 போட்டிகளில் 128 விக்கெட்களை 6.83 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து தற்போதைய இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஓரளவு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் அனுபவமிக்க இவரை இம்முறை ஏலத்தில் ஏதேனும் அணிகள் வாங்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இவர் பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர்.

- Advertisement -

2. ஆடம் ஜாம்பா: ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சமீப காலங்களில் பெங்களூரு அணியில் பெரிய தொகைக்கு விளையாடிய போதிலும் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் அந்த அணி தக்க வைக்கவில்லை. இருப்பினும் இளம் வீரரான இவர் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் 3 போட்டிகளில் 5 விக்கெட்களை 6.66 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்தார்.

zampa 1

மேலும் பிக்பேஷ் தொடரிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் உலக அளவில் தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக கருதப்படும் இவரை பெங்களூரு தவிர்த்து பஞ்சாப் போன்ற இதர அணிகள் பெரிய தொகைக்கு வாங்கலாம்.

1. அடில் ரசித்: இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் 2021 சீசனில் பஞ்சாப் அணியில் காயமடைந்த ஒரு வீரரின் மாற்றாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அறிமுகப் போட்டியில் விக்கெட் எடுக்காமல் 35 ரன்கள் கொடுத்ததால் வழக்கம் போல பதற்றப்பட்டு இவரை பஞ்சாப் நிர்வாகம் கழற்றி விட்டது.

Rashid 1

இதையும் படிங்க: எந்த சாக்கு போக்கும் சொல்ல விரும்பல. எங்க தோல்விக்கு இதுதான் காரணம் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

ஆனால் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் 6 போட்டியில் பங்கேற்ற இவர் 4 விக்கெட்டுகளை 6.12 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்து இங்கிலாந்து 2வது கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனால் இந்த ஏலத்தில் 2 கோடி அடிப்படை விலையில் களமிறங்கும் இவரை நிச்சயமாக வாங்குவதற்கு நிறைய அணிகள் போட்டி போடலாம்.

Advertisement