எந்த சாக்கு போக்கும் சொல்ல விரும்பல. எங்க தோல்விக்கு இதுதான் காரணம் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் அவர்களிடம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது டிசம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்த இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Shubman Gill

- Advertisement -

அதன்படி இன்று நடைபெற்று முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற பிரமாதமான வெற்றியை தொடர்ந்து இந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றவும் இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவும் இந்த வெற்றி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணியானது இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக சமாளிக்க முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது சந்தித்த தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் சாஹிப் அல் ஹசன் கூறுகையில் : இந்த மைதானத்தில் நிச்சயம் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்திருக்க முடியும்.

SHreyas Iyer vs BAN

ஆனால் நாங்கள் முதலாவது இன்னிங்சில் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. (5-6) மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் இங்கு விளையாடுவதால் எங்களால் முதலில் பெரிய அளவில் விளையாட முடியவில்லை. ஆனால் இந்த தோல்விக்கு எவ்வித காரணத்தையும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. நாங்கள் சரியாக பேட்டிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் முதல் இன்னிங்சில் செய்த தவறுகளை கவனித்த நாங்கள் அதனை இரண்டாவது இன்னிங்ஸ்சில் திருத்திக் கொண்டதாக நினைக்கிறேன்.

- Advertisement -

இருந்தாலும் இந்திய அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தினர். இந்த முதல் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஜாஹீர் ஹசன் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததற்கு எனது வாழ்த்துக்கள். டொமெஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் அவர் நிறைய ரன்களை குவித்ததாலேயே தேர்வுக்குழுவினர் அவரை எங்களது அணிக்கு தேர்வு செய்துள்ளனர்.

இதையும் படிங்க : நீங்களும் வன்மத்தை காட்டுவீங்கன்னு எதிர்பார்க்கல, யுவ்ராஜ் சிங் மீது தோனி ரசிகர்கள் அதிருப்தி – நடந்தது என்ன

நிச்சயம் இனி வரும் காலங்களில் அவர் எங்கள் அணிக்காக இன்னும் நிறைய சதங்களை அடிப்பார் என்றும் விரும்புகிறேன். ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் ஐந்து நாளும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் போராடியதாக நினைக்கிறேன் என ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement