நீங்களும் வன்மத்தை காட்டுவீங்கன்னு எதிர்பார்க்கல, யுவ்ராஜ் சிங் மீது தோனி ரசிகர்கள் அதிருப்தி – நடந்தது என்ன

Yuvraj
- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச அரங்கில் இந்தியாவின் உலக கோப்பை நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு 2000 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டார். குறிப்பாக 2001 நாட்வெஸ்ட் முத்தரப்பு கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய அவர் 2007 டி20 உலக கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தது உட்பட அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கருப்புக் குதிரையாக செயல்பட்டார்.

அதை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக மீண்டும் அசத்திய அவர் தொடர் நாயகன் விருது வென்று 28 வருடங்கள் கழித்து தோனி தலைமையில் இந்தியா கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் வரலாற்றின் மிகச்சிறந்த இந்திய வீரர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் கடந்த டிசம்பர் 12ஆம் தேதியன்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து மழை பொழிந்தார்கள்.

- Advertisement -

நீங்களும் இப்படி:
அந்த வரிசையில் குழந்தை பருவத்தில் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி சர்வதேச அரங்கில் சச்சின் டெண்டுல்கர் உட்பட ஜாம்பவான்களுடன் விளையாடிய நினைவு பயணங்கள் அடங்கிய புகைப்படங்களை வைத்து ஒரு சிறிய வீடியோவை உருவாக்கிய ஒரு ரசிகர் யுவராஜ் சிங்கை மனதார வாழ்த்தினார். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் அதே வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த ரசிகரின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். அதனால் நிறைய ரசிகர்கள் மகிழ்ந்தாலும் அந்த வீடியோவில் யுவராஜ் சிங் காட்டிய வன்மத்தை தோனியின் ரசிகர்கள் உன்னிப்பாக கண்டுபிடித்து அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

அதாவது அந்த வீடியோவில் சச்சின் போன்றவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை அப்படியே விட்ட யுவராஜ் சிங் 0.37 வது நொடியில் தோனியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் 2 நொடிகளை மட்டும் வெட்டி எடுத்து விட்டு எஞ்சிய வீடியோவை அப்படியே பதிவிட்டுள்ளார். அப்படி தேடிப் பிடித்து வெட்டி எடுக்கும் அளவுக்கு தோனி உங்களை என்ன செய்து விட்டார்? என்பதே அவரது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. சொல்லப்போனால் இந்தியா தோற்க வேண்டிய நிறைய போட்டிகளில் நங்கூரமான பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த இருவரும் இந்தியாவின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

- Advertisement -

அந்த வகையில் இருவரும் நல்ல நண்பர்களாக கருதப்பட்டாலும் தன்னுடைய கேரியரின் கடைசி காலங்களில் போதிய வாய்ப்பு கொடுக்காத கோபத்திலேயே தோனியின் புகைப்படத்தை யுவராஜ் வெட்டியுள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆனால் உண்மையாகவே 2011 உலக கோப்பையில் தொடர் நாயகன் வென்ற போது இதர வீரர்களை விட அதிகமாக கூச்சலிட்டு தோனி தான் கைதட்டி பாராட்டினார். மேலும் புற்று நோயிலிருந்து போராடி வந்த பின்பும் கேப்டனாக 2012க்குப்பின் அவருக்கு தேவையான வாய்ப்புகளை தோனி கொடுத்தார்.

இருப்பினும் குணமடைந்து வந்த பின் பழைய பன்னீர்செல்வமாக செயல்பட முடியாத யுவராஜ் சிங் 2014 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் 2016 டி20 உலக கோப்பை வரை தோனி தேவையான வாய்ப்புகளை கொடுத்தார். அதன்பின் இளம் வீரர்களை நோக்கி நகர்ந்த தோனிக்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலியும் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் யுவ்ராஜுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதிலும் சுமாராக செயல்பட்ட காரணத்தாலேயே வாய்ப்புகளை இழந்த யுவராஜ் சிங் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க: அவங்க 2 பேரும் பிரமாதமா பேட்டிங் பண்ணாங்க. வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் – ராகுல் பேசியது என்ன?

ஒருவேளை அடுத்த தலைமுறையை தோனி உருவாக்காமல் போயிருந்தால் இன்று இலங்கை போன்ற இதர அணிகளை போல இந்தியாவும் தடுமாறியிருக்கும். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் கெளதம் கம்பீர் போன்ற வீரர்கள் தான் அவ்வப்போது தோனி மீது வன்மத்தை காட்டி வருகிறார்கள் என்றால் நீங்களும் அப்படி தானா? என்று யுவராஜ் மீது ரசிகர்கள் அதிப்ருதியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement