அவங்க 2 பேரும் பிரமாதமா பேட்டிங் பண்ணாங்க. வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் – ராகுல் பேசியது என்ன?

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 404 ரன்கள் குவிக்க பங்களாதேஷ் அணி 150 ரன்களில் சுருண்டது. பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்து இருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 513 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவே இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND-vs-BAN

- Advertisement -

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய வீரர்களான புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தியிருந்தனர். அதேபோன்று பந்துவீச்சில் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் :

நாங்கள் இங்கு ஒரு பெரிய தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறோம். முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரானது எங்களது வழியில் செல்லவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் கடினமான உழைப்பிற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது. இந்த மைதானம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக இருந்தது.

Shubman Gill Century

முதல் மூன்று நாட்களில் ரன்கள் எடுப்பது இந்த மைதானத்தில் மிகவும் சவாலாக இருந்தது. அதே வேளையில் நமது அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்சில் நாம் 400 ரன்களுக்கு மேல் எடுத்தது இந்திய அணிக்கு சாதகமாக மாறியது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் தங்களது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பெரிய பங்கினை அளித்தனர்.

இதையும் படிங்க : இதுவே இந்தியாவா இருந்தா? ஆஸி, இங்கிலாந்தை வறுத்தெடுக்கும் சேவாக் மற்றும் இந்திய ரசிகர்கள் – காரணம் என்ன

அதேபோன்று இரண்டு இன்னிங்ஸ்சிலும் நமது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி நமது அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். இது ஒரு தரமான போட்டி நிச்சயம் அடுத்த போட்டியிலும் நாங்கள் இதே போன்ற வெற்றியை எதிர்பார்க்கிறோம் என கே.எல் ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement