- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்று சுதர்சன் சதமடிக்க மாட்டாரு.. நேரலையில் 58 ரன்னில் டிகே சொன்னதை.. உண்மையாக்கிய சாய்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கியது. 2 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் முடிவில் 318/2 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 38 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை நெருங்கிய போது 87 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

கணித்த கார்த்திக்:

இறுதியில் முடிவுக்கு வந்த ஆட்டநேர முடிவில் ஜெயஸ்வால் 173*, கேப்டன் சுப்மன் கில் 20* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். முன்னதாக கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். எனவே தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய அவர் அரை சதத்தை அடித்து அசத்தினர்.

அப்போது 58 ரன்களில் அவர் கொடுத்த கேட்ச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோமேல் வேரிக்கன் தவற விட்டார். அதைப் பயன்படுத்திய சுதர்சன் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இன்று சுதர்சனின் ஆட்டத்தைப் பார்க்கையில் சதத்தை அடிக்க மாட்டார் என்று தெரிகிறது என தினேஷ் கார்த்திக் நேரலையில் வருணித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

உண்மையாக்கிய சுதர்சன்:

“சுதர்சனிடமிருந்து சோம்பேறித்தனமான ஆட்டம் வெளிப்படுகிறது. ஒன்று அவர் வெள்ளைக்கோட்டுக்குள் ஆழமாக சென்று பந்தை ஃபுல் செய்திருக்க வேண்டும் அல்லது வலுவான ஷாட் அடித்திருக்க வேண்டும். ஆனால் சோம்பேறித்தனமாக ஃப்ளிக் அடித்த அவர் அருகில் தள்ளி விட்டு சிங்கிள் எடுக்கப் பார்த்தார். அந்த ஷாட்டை தாம் அடிக்கடி அடிப்பேன் என்று சுதர்சன் சொல்லலாம்”

இதையும் படிங்க: 13 ரன்னில் சதத்தை விட்டதுக்கு வருத்தப்படல.. ஜெய்ஸ்வால் எனக்கு இதை கத்துக் கொடுத்தாரு.. சுதர்சன் பேட்டி

“ஆனால் அச்சமயத்தில் அவருடைய பொசிஷன் அவர் இன்னும் கடினமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்கிறது. அது இன்று அவர் சதமடிக்க மாட்டார் என்பதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். அவருக்கு எதிராக இன்று அழகான பந்துகள் எதுவும் வீசப்படவில்லை. அவருக்கு இங்கே தன்னுடைய மனதை கட்டுப்படுத்தி கவனத்துடன் விளையாடுவது தேவைப்படுகிறது” என்று கூறினார். இறுதியில் தினேஷ் கார்த்திக் சொன்னது போலவே வேரிக்கன் பந்தில் சுதர்சன் அவுட்டாகி சதத்தை நழுவி விட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -