
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இன்னும் சரியாக ஒரு வாரத்தில் ஐசிசியின் 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் துவங்க உள்ளது. எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலக கோப்பை தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது எந்த அணி? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
உலகின் முன்னணி 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்நிலையில் இதற்கு முன்பாக பல்வேறு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், அனுபவ வீரர்கள் என பலரும் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து அதன் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்வரும் உலக கோப்பை தொடர் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில் எதிர்வரும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் தொடர் நாயகன் விருதினை வெல்வார்? என்று ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினார். அந்த வகையில் அந்த கேள்விக்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக் :
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரின் பெயரையும் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் ஜொலிக்கப்போகும் ஆல்ரவுண்டர்கள் இருவரில் ஒருவரே தொடர் நாயகன் விருதினை வெல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : எல்லாம் ஓகே. அடுத்த 1.5 மாசத்துக்கு எங்களை இப்படியே சப்போர்ட் பண்ணுங்க. இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த – ரிஸ்வான்
அவரது இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் தினேஷ் கார்த்திக் ஆல்ரவுண்டர்களின் பெயரை தொடர் நாயகன் போட்டியாளராக தேர்வு செய்து இருந்தாலும் நிச்சயம் முன்னணி பேட்ஸ்மேன்களும், முன்னணி பவுலர்களும் தொடர் நாயகன் விருதுக்கான போட்டியில் இடப்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.