- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸி தொடரில் அந்த 2 இளம் வீரர்கள் தான் புஜாரா, ரஹானே இடத்தை நிரப்ப சரியானவங்க.. டிகே கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இருப்பினும் இம்முறை ரகானே மற்றும் புஜாரா இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று சில முன்னாள் ஆஸ்திரேலிய தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் 2018 – 19 தொடரில் அதிக ரன்கள் குவித்த புஜாரா தொடர்நாயகன் விருது வென்று ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தரமான புஜாரா, ரஹானே:

அதே போல 2020 – 21 தொடரிலும் அதிக பந்துகளை எதிர்கொண்ட அவர் இந்தியாவின் வெற்றியில் மீண்டும் முக்கிய பங்காற்றினார். மறுபுறம் 2020 – 21 தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு விராட் கோலி நாடு திரும்பினார். அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே மெல்போர்னில் சதமடித்து அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவினார்

இருப்பினும் அதன் பின் சுமாராக விளையாடியதால் அவர்களை பிசிசிஐ கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் ரகானே மற்றும் புஜாரா ஆகியோரின் இடத்தை சர்பராஸ் கான், சுப்மன் கில் ஆகியோர் நிரப்பும் தகுதியைக் கொண்டுள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

புஜாரா, ரஹானேவுக்கு பதில்:

“சர்பராஸ் கான், சுப்மன் கில். இந்த 2 பேட்ஸ்மேன்களுமே இந்த வருடம் துவக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடினர். எனவே அவர்கள் ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அங்கே அவர்களால் ரகானே மற்றும் புஜாரா இடத்தை நிரப்ப முடியுமா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்”

இதையும் படிங்க: இதுக்கு நாம தான் காரணம்.. இதை செஞ்சா யாராலும் இந்தியாவை வீழ்த்த முடியாது.. ஹர்பஜன் விமர்சனம்

“அந்த இடங்களை நிரப்புவது மிகவும் கடினம். இருப்பினும் அதை செய்வதற்கான தகுதி அவர்களிடம் உள்ளது” என்று கூறினார். முன்னதாக சுப்மன் கில் ஏற்கனவே 2020 – 21 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் காபாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 91 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் அடுத்தடுத்த அரை சதங்களை அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -