தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்ததால் தப்பித்தார் – சந்தடி சாக்கில் பாகிஸ்தானை கலாய்த்த பாக் வீரர்

Dinesh Karthik Shaun Masood
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்ற இந்தியா ட்ரினிடாட் நகரில் துவங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 190/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோகித் சர்மா 64 (44) ரன்களும் தினேஷ் கார்த்திக் 41* (19) ரன்களும் எடுத்தனர்.

Dinesh Karthik Ashwin

- Advertisement -

அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அஷ்வின், பிஷ்னோய் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அந்த வெற்றிக்கு ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் களமிறங்கி 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* ரன்கள் குவித்து சூப்பர் பினிசிங் கொடுத்து காப்பாற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கலக்கும் டிகே:
கடந்த 2004இல் இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவருக்கு அதே காலகட்டத்தில் அறிமுகமாகி மிகச் சிறப்பாக செயல்பட்டு கேப்டனாக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி இருந்ததால் தொடர்ச்சியான வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்காமலேயே போனது. கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய அவரை அதன்பின் அணி நிர்வாகமும் மொத்தமாக கழற்றி விட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக பணியாற்றினார்.

Dinesh-Karthik

அதனால் அவரின் கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தாலும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் தன்னால் சாதிக்க முடியும் என்று நினைத்த தினேஷ் கார்த்திக் அதற்காக கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்து சிறந்த பினிஷராக நிரூபித்தார். அதன் காரணமாக 3 வருடங்கள் கழித்து தாமாக தேடி வந்த வாய்ப்பில் தென் ஆப்ரிக்க தொடரில் அசத்திய அவர் 37 வயதுக்குப்பின் அதிக ரன்கள், அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையுடன் இளம் வீரரை போல அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்தியாவின் அதிர்ஷ்டம்:
அவருக்கு கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஆதரவளிப்பதால் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் போன்ற 37 வயதுடைய வீரர் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்று முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். தினேஷ் கார்த்திக்கை பாராட்டிப் பேசும்போது திறமைக்கு மதிப்பில்லாத தங்களது நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் மறைமுகமான அரசியலை கலாய்க்கும் வகையில் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

Butt

“அதிர்ஷ்டவசமாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துள்ளார். ஏனெனில் அவருடைய வயதில் இருப்பவர்கள் பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாட முடிவதில்லை. இந்தியாவுக்கு இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். வருங்காலத்துக்கு தேவையான தரமான இளம் வீரர்கள் இப்போது அவர்களிடம் உள்ளனர். அவர்கள் நல்ல அணியை கட்டமைத்துள்ளார்கள். சுப்மன் கில் அசத்துகிறார், தினேஷ் கார்த்திக் பினிஷெராக செயல்படுகிறார். இவர்களுக்கு மத்தியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், அர்ஷிதீப் சிங் என அனைவரும் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். மொத்தமாக அவர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

மறுபுறம் பாகிஸ்தானில் தரமான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவிக்கும் சல்மான் பட் பந்துவீச்சு துறையில் சாகின் அப்ரிடியை மட்டுமே மொத்த அணியும் பெரிய அளவில் நம்பியுள்ளதாகவும் கூறினார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு :

இதையும் படிங்க : இந்திய அணிக்கு கிடைத்த வாசிம் அக்ரம். இவரை கரெக்ட்டா யூஸ் பண்ணனும் – கோலியின் பயிற்சியாளர் கருத்து

“புதிய பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் வருவதற்கு முன்பாக தற்சமயத்தில் பாகிஸ்தான் அணி தரமான அடுத்த கட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஓப்பனிங் வீரர்கள் இல்லாமல் தடுமாறுகிறது. இருப்பினும் இயற்கையாகவே பாகிஸ்தான் நிறைய பந்துவீச்சாளர்கள் நிரம்பிய அணியாகும். ஆனால் விவேகமில்லாத வேகத்தில் எந்த பயனுமில்லை” என்று கூறினார்.

Advertisement