இந்திய அணிக்கு கிடைத்த வாசிம் அக்ரம். இவரை கரெக்ட்டா யூஸ் பண்ணனும் – கோலியின் பயிற்சியாளர் கருத்து

Arshdeep Singh IND vs WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்அவுட் செய்த இந்திய அணியானது அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட t20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது t20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

INDvsWI

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நான்கு ஓவர் வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக அவரது முதல் ஸ்பெல்லில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கையில் மேயர்ஸ் சிக்சர், பவுண்டரி என அதிரடி காட்ட பின்னர் மீண்டும் அதிலிருந்து திரும்பி வந்த அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பந்துவீச்சை கண்ட கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா அவரை வெகுவாக பாராட்டி பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அர்ஷ்தீப் சிங் பந்து வீசும் விதம் வாசிம் அக்ரமை போன்று இருக்கிறது. ஏனெனில் அவர் ஓடிவரும்போது பந்தை வலது கையில் வைத்து மறைத்தபடி ஓடி வருகிறார். அதனால் பேட்ஸ்மேன்கள் அவர் என்ன வகையில் பந்து வீசப் போகிறார் என்பதை கணிப்பது கடினமாகும்.

Arshdeep Singh

அதே வேளையில் அவர் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றார் போல் யோசித்து பந்து வீசுவதால் அவரால் ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி விக்கட்டுகளையும் வீழ்த்த முடிகிறது. அதோடு மிகவும் இளம் வயது வீரரான அவர் அனுபவ வீரர்களுடன் இணைந்து தற்போது இந்திய அணியில் பயணிப்பதால் அவர் கற்றுக் கொள்ள நிறைய விடயம் இருக்கிறது. இதன் காரணமாக நிச்சயம் அவர் ஒரு இன்டெலிஜென்ட்டான கிரிக்கெட்டராக மாறுவார் என ராஜ்குமார் சர்மா புகழ்ந்து பேசி உள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அர்ஷ்தீப் சிங் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தற்போது அசத்தி வருகிறார். நிச்சயம் இனி வரும் போட்டிகளிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் மிகப்பெரிய வீரராக அவர் உருவெடுப்பார். அதோடு அவர் இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்து வலைப் பயிற்சியில் பயிற்சி எடுக்கும் போது பல்வேறு விடயங்களை அவர் கற்றுக் கொள்வார்.

இதையும் படிங்க : செலக்சனில் சந்தேகம் இருந்தா எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க – சேட்டன் சர்மாவை கலாய்த்த முன்னாள் ஜாம்பவான் தேர்வுக்குழு தலைவர்

எனவே இனிவரும் தொடர்களிலும் அவரை இந்திய அணியில் இணைத்து அவருக்கு சரியான பயிற்சி கொடுத்தால் முன்னணி பவுலராகவும் அவர் மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக ராஜ்குமார் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement