செலக்சனில் சந்தேகம் இருந்தா எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க – சேட்டன் சர்மாவை கலாய்த்த முன்னாள் ஜாம்பவான் தேர்வுக்குழு தலைவர்

Chetan-Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பும் இந்தியா ஒரு வாரம் ஓய்வுக்குப்பின் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தலைநகர் ஹராரேயில் வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து முக்கிய வீரர்களும் ஓய்வெடுக்கும் நிலையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அசத்திய ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Shikhar Dhawan Team India

- Advertisement -

அவரது தலைமையில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ள ராகுல் திரிப்பாதியுடன் சஞ்சு சாம்சன், அக்சர் படேல், இஷான் கிசான், ருதுராஜ், தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப காலங்களில் காயத்தால் விலகிய குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுமாராக செயல்பட்ட ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ள தேர்வுக்குழு அதே தொடரில் அசத்தலாக செயல்பட்டு வரும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங்க்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

குழப்பும் தேர்வுக்குழு:
முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறி கடும் விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதால் அவரது தலைமையில் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறியும் வேலையில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் ஈடுபட்டுள்ளது.

Rishabh pant Shreyas Iyer Sanju Samson

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் அந்த வேலையை துவக்கிய தேர்வுக்குழு தென்னாபிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக ஜிம்பாப்வே தொடரில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. இருப்பினும் யாருக்குமே நிலையான வாய்ப்பும் ஆதரவும் கிடைப்பதில்லை. நிறைய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், அர்ஷிதீப் சிங், தீபக் ஹூடாவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. அதேபோல் கேஎல் ராகுல் இல்லாத சமயத்தில் இஷான் கிசான், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் என ஒவ்வொரு தொடருக்கும் ஒரு தொடக்க வீரர் சோதித்து பார்க்கப்படுகிறார்கள்.

- Advertisement -

கலாய்த்த ஸ்ரீகாந்த்:
அதில் சிறப்பாக செயல்பட்டாலும் அடுத்த தொடரில் மாற்றப்படுகிறார்கள். போதாகுறைக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 மாதத்திற்கு 7 கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்தியுள்ளது நிலையற்ற தன்மையை காட்டுகிறது. இப்படி சோதனை செய்து பார்க்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக குழப்பி சொதப்பி வரும் தேர்வுக்குழு 2022 டி20 உலகக் கோப்பைக்கு தரமான அணியை தேர்வு செய்யுமாறு தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் இந்திய கேப்டன் கிறிஸ் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chetan-1

இதுநாள் வரை சொதப்பினாலும் இன்னும் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக 15க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளதால் அதிலிருந்து தரமான அணியை செய்யுமாறு தேர்வுக் குழுவுக்கு கோரிக்கை வைத்துள்ள அவர் உதவி தேவைப்பட்டால் தமக்கோ அல்லது ரவி சாஸ்திரிக்கோ போன் செய்யுமாறு தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மாவை கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார்.

- Advertisement -

1983 உலக கோப்பையில் இந்த மூவருமே இணைந்து விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் தமிழகத்தின் ஸ்ரீகாந்த் கடந்த 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பையை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரியுடன் இணைந்து வர்ணனை செய்தபோது இது பற்றி பேசியது பின்வருமாறு.

Srikanth

“அவர்கள் சரியான அணியை தேர்வு செய்ய வேண்டுமெனில் எங்களுடன் நிறைய கிரிக்கெட் விளையாடிய சேட்டன் சர்மா சிறப்பாக செயல்பட வேண்டும். ஹேய் சேட்டன், இந்த முறை தயவு செய்து சரியான அணியைத் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு உதவி எதுவும் தேவைப்பட்டால் எனக்கு அல்லது ரவி சாஸ்திரிக்கு போன் செய்யுங்கள்”

இதையும் படிங்க: இனி நாங்களே நினைத்தாலும் தினேஷ் கார்த்திக்கை டி20 உ.கோ அணியிலிருந்து நீக்கமுடியாது – இந்திய தேர்வுக்குழு கருத்து

“நாங்கள் இருவரும் உங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குகிறோம். ஏனெனில் தற்சமயத்தில் நீங்கள் இது போன்ற சோதனை முயற்சிகளை செய்வதில் எந்த தவறுமில்லை. ஆனால் ஆசிய கோப்பை முதல் இறுதிக்கட்ட தரமான அணியை தேர்வு செய்ய வேண்டும்” என்று தனக்கே உரித்தான கலகலப்பான பாணியில் கூறினார்.

Advertisement