முதல் நாள் வர்ணனையாளர், அடுத்த நாள் அதிரடி பினிஷராக மிரட்டல் – ஆர்சிபி அணிக்காக தீயாக விளையாடும் டிகே

DInesh Karthik
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் களமிறங்கும் 10 அணிகளில் 2008 முதல் எவ்வளவோ போராடியும் சாம்பியன் பட்டத்தை முத்தமிட முடியாமல் திண்டாடி வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு களமிறங்குகிறது. கடந்த வருடம் பப் டு பிளேஸிஸ் தலைமையில் லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்ட அந்த அணி வழக்கம் போல பிளே ஆப் சுற்றில் ஏமாற்றத்தை சந்தித்தது.

இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு இம்முறை புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதை விட கடந்த வருடம் பெங்களூரு அணிக்காக நீண்ட நாட்கள் கழித்து விளையாடிய தமிழகத்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பெரும்பாலான போட்டிகளில் டாப் ஆர்டர் சரிந்த நிலையில் மிடில் ஆடரில் களமிறங்கி எதிரணிகளை சரமாரியாக அடித்து 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மிகச் சிறந்த பினிஷாராக செயல்பட்டு லீக் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தீயாய் செயல்படும் டிகே:
அதன் காரணமாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் மீண்டும் இந்தியாவுக்காக தேர்வாகி இருதரப்பு தொடர்களில் அசத்தினாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவது கடினமாக பார்க்கப்பட்டாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அதற்கு முன்பாக தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டி 3 நாட்களில் முடிந்ததால் எஞ்சிய 2 நாட்கள் என்ன செய்வது என்று ரசிகர்களிடம் கலகலப்பான கேள்வியை எழுப்பினார்.

அந்த நிலையில் அந்த 2 நாட்களை வீணடிக்காமல் மும்பைக்கு பறந்த அவர் அங்கு நடைபெறும் டிஒய் பாட்டில் டி20 தொடரில் களமிறங்கியுள்ளார். அதில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்பிஐ அணிக்கு எதிரான போட்டியில் 66/3 என டிஒய் பாட்டில் குரூப் பி தடுமாறிய போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வழக்கம் போல அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5 பவுண்டரியும் 6 சிக்சர்களையும் பறக்க விட்டு 75 (38) ரன்களை சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அவரது அதிரடியான ஆட்டத்தால் 186/6 ரன்கள் குவித்த டிஒய் பாட்டில் அணி இறுதியில் ஆர்பிஐ அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மொத்தத்தில் முதல் நாளில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாக் வாக்’கிடம் இந்தியாவை விட்டுக் கொடுக்காமல் அனல் பறக்கும் வர்ணையாளராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் அடுத்த நாளில் மும்பையில் டி20 போட்டியில் களமிறங்கி அதிரடியாக செயல்பட்டு இந்திய மைதானங்களில் தன்னை மீண்டும் மிகச்சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துள்ளது தமிழக ரசிகர்களை விட பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

குறிப்பாக ஐபிஎல் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே நேரத்தை வீணடிக்காமல் சிறப்பாக செயல்பட்டு முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தீயாக பயிற்சிகளை எடுத்து வரும் தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு ரசிகர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : அந்த 3 பேர் மட்டும் இல்லனா இந்நேரம் நாம ஆஸ்திரேலியா கிட்ட தோத்துருப்போம் – சபா கரீம் பாராட்டு

அதே போல் 37 வயதிலும் இந்திய மண்ணில் இது போன்ற நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவரை வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று சில ரசிகர்கள் சொன்னாலும் தயவு செய்து அதை மட்டும் செய்து விட வேண்டாம் என்று பெரும்பாலான ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement