இன்னிக்கு ரிங்கு சிங் இப்படி ஆடுவதற்கு அவர் தான் காரணம்.. முன்னாள் இந்திய வீரரை பாராட்டிய டிகே

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஜோஸ் இங்லிஷ் 110 ரன்கள் எடுத்த உதவியுடன் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் 80, இஷான் கிஷம் 58 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தனர். ஆனாலும் கடைசி நேரத்தில் விக்கெட் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டாலும் மறுபுறம் மிகச்சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸருடன் 22* (14) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

டிகே பாராட்டு:
ஐபிஎல் தொடரில் கடந்த 2018 முதல் பெஞ்சில் அமர்ந்து வந்த ரிங்கு சிங் 2023 சீசனில் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்து இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி தற்போது அசத்தி வருகிறார். இந்நிலையில் ரிங்கு சிங் இன்று இந்தளவுக்கு சிறப்பாக செயல்படுவதற்கு முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர் 2018 முதல் ஐபிஎல் தொடரில் கொடுத்த தொடர்ச்சியான ஆதரவு தான் காரணம் என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

இப்போட்டியில் ஃபினிஷிங் செய்த ரிங் சிங்கை களத்தில் வர்ணனையாளராக இருந்த அபிஷேக் நாயர் நேரடியாக கட்டிப் பிடித்து பாராட்டிய புகைப்படம் வைரலானதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள தினேஷ் கார்த்திக் இது பற்றி கூறியுள்ளது பின்வருமாறு. “இது மிகவும் நிறைவான இதயத்தை வெளிப்படுத்தும் படங்களில் ஒன்றாகும். ரிங்கு சிங் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோரிடையே இருக்கும் பார்ட்னர்ஷிப் 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் என்னுடைய நேரத்தில் துவங்கியது”

- Advertisement -

“குறிப்பாக ரிங்குவிடம் நல்ல திறமை இருப்பதை பார்த்த அபிஷேக் நாயர் எப்போதும் அவரிடம் நீங்கள் ஏதோ ஸ்பெஷலாக செய்வதற்கு சிறிது நேரம் மட்டுமே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அலிகார் போன்ற சிறிய நகரிலிருந்து வந்த ரிங்கு பெரியதாக சிந்திப்பதை மட்டுமே தேவையாக கொண்டிருந்தார். அதில் வேலை செய்த அபிஷேக் நாயர் டெத் ஓவர்களில் அசத்தும் திறமையை ரிங்குவிடம் வளர்த்தார்”

இதையும் படிங்க: மைதானத்திலேயே ரிங்கு சிங்கை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த இந்த நபர் யார் தெரியுமா? – விவரம் இதோ

“மேலும் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூரிடம் கொல்கத்தா அணியில் ரிங்கு இருக்க வேண்டும் என்றும் அவர் பேசி சம்மதிக்க வைத்தார். ஐபிஎல் முடிந்து காயத்திலிருந்து குணமடைவதற்காக ரிங்கு பல நாட்கள் நாயர் வீட்டில் தங்கியுள்ளார். நாயர் மற்றும் கொல்கத்தா அணி ரிங்கு மேட்ச் வின்னிங் ஃபினிஷராக வரவேண்டும் என்பதை விரும்பினார்கள். இன்று நாயர் ஒரு பயிற்சியாளராக முன்னேறி ரிங்குவை இந்த உலகத்துடன் சேர்ந்து பார்க்கிறார். சிறப்பாக செயல்பட்டீர்கள் அபிஷேக் மற்றும் ரிங்கு” என்று கூறியுள்ளார்

Advertisement