மைதானத்திலேயே ரிங்கு சிங்கை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த இந்த நபர் யார் தெரியுமா? – விவரம் இதோ

Rinku-Singh-and-Abhishek
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியின் போது முதலில் முடியாது ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்திய அணியானது 22 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் 3 ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்க்க 58 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை விளையாடி வந்த சூரியகுமார் யாதவும் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் இந்திய அணி சரிவை சந்தித்தது. பின்னர் திலக் வர்மா 12 ரன்களிலும், அக்சர் பட்ரேல் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி நேரத்தில் பதற்றம் தொற்றி கொண்டது. அப்போது எந்தவித அழுத்தமும் இன்றி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 14 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்து அசத்தார்.

- Advertisement -

அதோடு கடைசி பந்தில் அவர் சிக்ஸர் அடித்தாலும் நோபால் என்பதனால் அந்த சிக்சர் கணக்கில் கொள்ளப்படாமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இருப்பினும் இறுதிவரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த ரிங்கு சிங்கை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி பந்தியில் சிக்சர் அடித்து விட்டு ரிங்கு சிங் மைதானத்தில் இருந்து வெளியேறிய போது அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்த நபர் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : இவங்களுக்கு இதே வேலையா போச்சி.. ஜெய்ஸ்வாலை மட்டமாக சீண்டிய ஸ்டாய்னிஸ் – நடந்தது என்ன?

அந்த வகையில் கட்டிப்பிடித்து வாழ்த்திய அந்த நபர் அபிஷேக் நாயக் என்பவர் தான். ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அபிஷேக் நாயர் என்பவர் தான் ரிங்கு சிங்கின் திறனை கண்டறிந்து அவருக்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி கொல்கத்தா அணியில் நிரந்தர இடம் பிடிக்க செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த அபிஷேக் நாயக் என்பவர் தான் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது கரியரின் மோசமான கட்டத்தில் இருந்தபோது அவரை மீட்டெடுத்து மிகச்சிறந்த பினிஷராக மாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement