8 மணிக்கு தான் கன்பார்ம் பண்ணாங்க.. ஆனா 6.18க்கே அஷ்வின் பத்தி தினேஷ் கார்த்திக் போட்ட பதிவு – எப்படிங்க இதெல்லாம்?

Karthik-and-Ashwin
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க ஐ.சி.சி செப்டம்பர் முதல் வாரம் வரை கெடு விதித்திருந்தது. அதன்படியே இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது உலக கோப்பையை அணியை அறிவித்தனர்.

அதோடு இந்த அணிகளில் ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டும் என்றால் செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று ஐசிசி இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏனெனில் இந்த இடைப்பட்ட காலத்தில் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஏதேனும் வீரர்களுக்கு காயமோ அல்லது தனிப்பட்ட காரணங்களால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இந்த மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று ஐசிசி கடைசி கெடுவினை விதித்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் செப்டம்பர் 28-ஆம் தேதியான இன்று அனைத்து அணிகளும் தங்களது உறுதி செய்யப்பட்ட உலகக் கோப்பை அணியை வெளியிட்டு விட்டன. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் செப்டம்பர் 28-ஆம் தேதி இரவு 8 மணியளவில் இந்திய அணியை உறுதி செய்தது.

அந்த அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார் என்றும் காயமடைந்த அக்சர் பட்டேல் அணியில் இருந்து வெளியேறுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி இரவு 8 மணிக்கு உறுதியான அணி அறிவிக்கப்படும் போதே அஸ்வின் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார் என்று உறுதியானது.

- Advertisement -

ஆனால் மற்றொரு தமிழக நட்சத்திர வீரரான தினேஷ் கார்த்திக் அவரது டிவிட்டர் பக்கத்தில் மாலை 6 மணி 18 நிமிடத்தில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணியில் இருக்கிறார். எப்படி என்று யாரும் கேட்காதீர்கள்? ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது என்னுடைய உள்ளுணர்வு தான் என்று பதிவிட்டுள்ளார். அவர் இப்படி பதிவை பகிர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே அஸ்வின் இந்திய அணியில் வாய்ப்பினை பெற்றதால் தினேஷ் கார்த்திக்கின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி , கில் இல்ல.. 2023 உ.கோ தொடரில் இந்தியாவின் கேம் சேஞ்சர்ஸ் அவங்க தான் – 3 வீரர்களை பெயரிட்ட யுவராஜ் சிங்

மேலும் முன்கூட்டியே இவர் எவ்வாறு இதனை தெரிந்து கொண்டார்? என்றும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் நீண்ட நாட்கள் கழித்து இடம்பெற்றிருந்த அஸ்வின் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாலும் அனுபவ வீரர் என்பதாலும் தற்போது 50 ஓவர் உலககோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement