விராட் கோலி , கில் இல்ல.. 2023 உ.கோ தொடரில் இந்தியாவின் கேம் சேஞ்சர்ஸ் அவங்க தான் – 3 வீரர்களை பெயரிட்ட யுவராஜ் சிங்

Yuvraj Singh 3
- Advertisement -

வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் கோலாலமாக நடைபெற உள்ளது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் எப்போதுமே சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படக்கூடிய இந்திய அணி 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் நிகழ்த்திய மேஜிக் வெற்றியை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதற்கேற்றார் போல் நடைபெற்று முடிந்த 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை துவம்சம் செய்து 8வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பின் சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. மேலும் இந்த தொடர்களில் சமீப காலங்களில் தடுமாறி வந்த கேப்டன் ரோகித் சர்மா, கில், குல்தீப் யாதவ் ஆகிய முக்கிய வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

யுவியின் கணிப்பு:
மேலும் பும்ரா, கேஎல் ராகுல் போன்ற காயத்தை சந்தித்த வீரர்களும் முழுமையாக குணமடைந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மை எட்டியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது. இந்த சூழ்நிலையில் நடைபெற உள்ள உலகக்கோப்பையில் பேட்டிங் துறையில் இளம் கன்றாக இருக்கும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி வெற்றியை மாற்றக்கூடியவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல அழுத்தமான போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்திய அணியை தாங்கிப்பிடித்து வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று உறுதியாக ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் பும்ரா, ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தான் இந்த உலகக் கோப்பையில் தம்மை பொறுத்த வரை வெற்றியை இந்தியாவின் பக்கம் மாற்றக்கூடிய முதன்மை வீரர்களாக இருப்பார்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “3 கேம் சேஞ்சர்கள் என்று பார்க்கும் போது நிச்சயமாக ஜஸ்பிரித் பும்ரா, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களுடைய அனுபவத்தால் அசத்தக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதே போல 3வது வீரராக தற்போது சிறப்பாக பந்து வீசும் முகமது சிராஜ் இருப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உண்மையிலேயே அது யார் கை தெரியுமா? தல தோனியுடன் எடுத்த புகைப்படத்தின் 4 வருட மர்மத்தை உடைத்த மயங் அகர்வால்

அதே நிகழ்ச்சியில் பேசிய கௌதம் கம்பீர் அந்த 3 பேரில் ஒருவராக ரோஹித் சர்மா இருப்பார் என்று தம்முடைய கணிப்பை தெரிவித்தது பின்வருமாறு. “இதில் ரோகித் சர்மாவும் இருப்பார். ஏனெனில் பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களில் தற்போது இருக்கும் ஃபார்முக்கு ரோகித் பெரிய ரன்கள் குவிப்பார் என்று என்னால் சொல்ல முடியும். மேலும் அவர் மகத்தான பேட்ஸ்மேன் மற்றும் மேட்ச் வின்னர் என்பதை அனைவரும் அறிவார்கள்” என்று கூறினார்.

Advertisement