மார்க் பண்ணி வெச்சுக்கோங்க மார்க், நேரலையில் வர்ணனையை விட்டு ஸ்லெட்ஜிங் செய்துகொண்ட மார்க் வாக் – டிகே

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. சுழலுக்கு சாதகமாக இருந்த அந்த மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரது அதிரடியான வேகப்பந்து வீச்சில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆகிய தொடக்க வீரர்களை தலா 1 ரன்னில் அவுட்டானார்கள்.

IND vs AUS Rohit

- Advertisement -

அதனால் 2/2 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்றிய உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்ன்கள் மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களிலும் ஜடேஜாவின் சுழலில் சிக்கினர். அதை தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களில் அதிரடி காட்ட முயன்ற அலெக்ஸ் கேரி 36 (33) ரன்களில் அஷ்வின் சுழலில் சிக்கிய நிலையில் எஞ்சிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அனல் பறந்த நேரலை:
அதை தொடர்ந்து சுழலுக்கு சாதகமாக இருந்த அதே மைதானத்தில் 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 20 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் ரோகித் சர்மா 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56* (69) ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அதனால் முதல் நாள் முடிவில் 77/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் வலுவான நிலையில் உள்ளது. அப்படி சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே குற்றம் சுமத்திய ஆஸ்திரேலியா செயலில் சுமாராக செயல்பட்டு இப்போட்டியில் தடுமாறி வருகிறது.

Mark Waugh

அதனால் இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாமலேயே இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்று நேரலையில் பேசிய தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக்’கிடம் தெரிவித்தார். அப்படி துவங்கிய அந்த விவாதம் இறுதியில் காரசாரமாக மாறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களுடைய உரையாடல்கள் பின்வருமாறு:

- Advertisement -

தினேஷ் கார்த்திக்: இந்த போட்டியில் இந்தியா ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்யும் என்று நான் உணர்கிறேன்.
மார்க் வாக்: அதையும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் டிகே. பொறுத்திருந்து பார்ப்போம்.
தினேஷ் கார்த்திக்: இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் மார்க்.
மார்க் வாக்: இப்போட்டி 5 நாட்களுக்குள் முடியுமா அல்லது 3 நாட்களுக்குள் முடியுமா என்பதையும் கூறினால் நான் டைரியில் குறித்து வைத்துக் கொள்வேன். நீங்கள் சொல்வதும் சரி தான். இங்கு வெற்றி பெறுவது சுலபமல்ல. குறிப்பாக இந்த மைதானத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினமாகும்.

DInesh Karthik Commentrator

தினேஷ் கார்த்திக்: ஆனால் அது கடினமாக இருக்காது. ஏனெனில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களே அந்த வேலையை கச்சிதமாக முடிப்பவர்களைப் போல் காட்சியளிக்கிறார்கள்.
மார்க் வாக்: இரு அணிகளும் இங்கே முழுமையாக ஒரு முறை பேட்டிங் செய்யாத வரை எதையும் மதிப்பிடாதீர்கள் என்று தான் நான் சொல்கிறேன். எனவே நாம் பொறுத்திருந்து எது எப்படி மடங்குகிறது என்பதை பார்ப்போம். இந்த பெரிய தருணத்தில் ஆஸ்திரேலியா எதையும் அவ்வளவு சுலபமாக விட்டு விடாது. ஏனெனில் இந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அளவுக்கு தரம் கிடையாது. குறிப்பாக இந்திய பேட்டிங் வரிசையில் 2 வீரர்கள் 60க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்டிருக்கவில்லை.

இதையும் படிங்க: ஐசிசி மகளிர் டி20 உ.கோ 2023 : சரித்திரம் படைக்குமா இந்தியா, அணி விவரம், அட்டவணை – எந்த சேனனில் பார்க்கலாம்

தினேஷ் கார்த்திக்: இருப்பினும் இந்தியாவில் ஒருவர் (ரோஹித்) 60க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ளார்.
மார்க் வாக்: ரோகித் கிளாஸ் வீரர் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் புஜாரா தனக்குள் பாறையை கொண்டிருப்பவர்.

Advertisement