ஐசிசி மகளிர் டி20 உ.கோ 2023 : சரித்திரம் படைக்குமா இந்தியா, அணி விவரம், அட்டவணை – எந்த சேனனில் பார்க்கலாம்

Advertisement

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தென்னாபிரிக்காவில் பிப்ரவரி 10 முதல் கோலாகலமாக துவங்குகிறது. கடந்த 2009 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா அசால்டாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் ஜொலிக்கிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா 1 கோப்பைகளை வென்றுள்ள நிலையில் இந்தியா இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக ஃபைனல் வரை முன்னேறிய இந்தியா ஆஸ்திரேலியாவிடம் சரமாரியான அடி வாங்கி தோற்றதை ரசிகர்களால் மறந்திருக்க முடியாது.

womens ind

அதனால் நீண்ட காலமாகவே மகளிர் கிரிக்கெட்டில் ஐசிசி கோப்பையை வெல்ல போராடி வரும் இந்தியா சமீபத்தில் இதே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 அண்டர்-19 உலக கோப்பையை ஷபாலி வர்மா தலைமையில் வென்று சரித்திரம் படைத்தது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜூனியர் அணியை பார்த்து ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான சீனியர் அணியினர் இம்முறை அதே தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளனர்.

- Advertisement -

பார்மட்:
அவரது தலைமையில் ஸ்மிருதி மந்தனா, ரேணுகா சிங், ஷபாலி வர்மா போன்ற நிறைய தரமான வீராங்கனைகள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால் இம்முறை நிச்சயம் கோப்பை வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பிப்ரவரி 10ஆம் தேதியன்று துவங்கும் இத்தொடரில் உலகம் முழுவதில் இருந்து டாப் 10 அணிகள் கோப்பைக்காக 23 போட்டிகளில் பலபரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தல ஒரு முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் வரும் பிப்ரவரி 21 வரை லீக் சுற்று நடைபெறுகிறது.

அந்த லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர் அதில் வெற்றி பெறும் 2 அணிகள் வரும் பிப்ரவரி 26ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் பைனலில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது லீக் சுற்றில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் மோத உள்ளது.

- Advertisement -

இந்தியாவின் அட்டவணை (இந்திய நேரப்படி):
பிப்ரவரி 12 : மாலை 6.30, இந்தியா V பாகிஸ்தான், கேப் டவுன்
பிப்ரவரி 15 : மாலை 6.30, இந்தியா V வெஸ்ட் இண்டீஸ், கேப் டவுன்
பிப்ரவரி 18 : மாலை 6.30, இங்கிலாந்து V இந்தியா, கிக்பெரா
பிப்ரவரி 20 : மாலை 6.30, இந்தியா V அயர்லாந்து, கிக்பெரா

IND vs Pak Common Wealth Games Womens

இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), அஞ்சலி சர்வாணி, யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கைக்வாட், ரிச்சா கோஸ், சிக்கா பாண்டே, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, பூஜா வஸ்திரகர், ராதா யாதவ்

- Advertisement -

ரிசர்வ் வீராங்கனைகள்: சபினெனி மேக்னா, மேக்னா சிங், ஸ்னே ராணா

இதையும் படிங்க: IND vs AUS : ஜடேஜா சீட்டிங் பண்ணிட்டாரு, ஆதாரத்துடன் புதிய புயலை கிளப்பும் டிம் ஃபைன் – வாகன், இந்திய ரசிகர்கள் பதிலடி

எதில் பார்க்கலாம்: இந்த மகளிர் டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம். அதே போல் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் இந்தியாவின் போட்டிகளை மட்டும் இலவசமாக பார்க்கலாம். அத்துடன் அனைத்து போட்டிகளையும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்கள் பார்க்க முடியும்.

Advertisement