IND vs AUS : ஜடேஜா சீட்டிங் பண்ணிட்டாரு, ஆதாரத்துடன் புதிய புயலை கிளப்பும் டிம் ஃபைன் – வாகன், இந்திய ரசிகர்கள் பதிலடி

Micheal Vaughan Jadeja Tim Paine
- Advertisement -

நாக்பூரில் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கிய 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக ஷமி, சிராஜ் ஆகியோரது அதிரடியான வேகப்பந்து வீச்சில் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஆகியோர் ஆரம்பத்திலேயே தலா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 2/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடிய உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான மார்னஸ் லபுஸ்ஷேனை 49 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித்தை 37 ரன்களிலும் அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா மொத்தமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இடையே அதிரடி காட்ட முயன்ற அலெக்ஸ் கேரியை 36 (33) ரன்களில் அவுட்டாக்கிய அஸ்வின் 3 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுழலுக்கு சாதகமான மைதானத்தில் வளைந்து கொடுக்காத கேப்டன் ரோகித் சர்மா சற்று அதிரடியாக 9 பவுண்டரி 1 சிக்சருடன் 56* (69) ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த ராகுல் 20 ரன்களில் கடைசி நேரத்தில் அவுட்டாகி சென்றாலும் முதல் நாள் முடிவில் 77/1 என்ற நிலையுடன் விளையாடி வரும் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

- Advertisement -

ஜடேஜா சீட்டிங் பண்ணிட்டாரு:
முன்னதாக இந்த போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து 6 மாதங்கள் கழித்து முதல் முறையாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா தனது மாயாஜால சுழலால் தடுப்பாட்டத்தை போட முயன்ற லபுஸ்ஷேன், ஸ்மித் போன்ற உலகின் டாப் பேட்ஸ்மேன்களை காலி செய்து 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை முன்னிலைப்படுத்தி அபார கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா சீட்டிங் செய்தாரா என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் ஆகியோர் ட்விட்டரில் புதிய புயலை கிளப்பியுள்ளார்கள்.

அதாவது இப்போட்டியின் முதல் நாளன்று ஒரு குறிப்பிட்ட தருணத்தில் முகமது சிராஜ் தனது உள்ளங்கைக்கு மேலே ஏதோ ஒரு க்ரீம் போன்ற திரவத்தை ஜடேஜாவிடம் நீட்டுகிறார். அதை சுட்டு வீரலால் லேசாக தொட்ட ஜடேஜா அதை பந்தை பிடித்து வீசும் இடது கையின் அனைத்து விரல்களிலும் கேப்டன் ரோகித் சர்மாவுடன் பேசிக்கொண்டே ஃபீல்டிங் செட்டிங் செய்து கொண்டே தடவினார்.

- Advertisement -

அதை படம் பிடித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் பந்தை இறுக்கமாக பிடிப்பதற்காக வேண்டுமென்றே ஜடேஜா ஏதோ ஒரு பொருளை பயன்படுத்துவதாக ட்விட்டரில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த முன்னாள் கேப்டன் டிம் ஃபைன் இது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்று பதிலளித்துள்ளார். அதை ஆஸ்திரேலியாவில் இத்தொடரை ஒளிபரப்பு வரும் பாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது ட்விட்டரில் பதிவிட்டு விவாதத்தை எழுப்பியது.

அதைப் பார்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஜடேஜா தனது விரல்களில் என்ன பூசுகிறார்? இது போன்றதை நான் பார்த்ததில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக நாக்பூரில் பிட்ச் உருவாக்கியதை போலவே இங்கேயும் இந்தியா அணியினர் ஏதோ சீட்டிங் செய்வதாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் அது பொதுவாக சருமத்தில் காய்ந்த தன்மையை தவிர்ப்பதற்காக பெரும்பாலான சமயங்களில் வீரர்கள் பூசிக்கொள்ளும் பாரிஸ் சாந்து போன்றது தானே தவிர உங்களைப் போல் பந்தை தேய்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உப்பு காகிதம் கிடையாது என்று ஆஸ்திரேலியர்களுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

இதையும் படிங்க: அவரை கன்னத்துல அறைஞ்சு கேள்வி கேட்க போறேன், இளம் இந்திய வீரரிடம் அக்கறையுடன் கோபப்படும் கபில் தேவ் – காரணம் என்ன

மேலும் களத்தில் இருந்த நடுவர்கள் நேரடியாக பார்த்தும் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் நீங்கள் தான் ஆரம்பத்தில் பிட்ச் பற்றி குறை சொன்னது போல் இந்த விஷயத்திலும் இந்தியா மீது குற்றம் சாட்டுவதாக ஆஸ்திரேலியாவுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement