அவரை கன்னத்துல அறைஞ்சு கேள்வி கேட்க போறேன், இளம் இந்திய வீரரிடம் அக்கறையுடன் கோபப்படும் கபில் தேவ் – காரணம் என்ன

Kapil-Dev
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா களமிறங்கும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் கடந்த 2 தொடர்களில் அடுத்தடுத்த வரலாற்றுத் தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்த தொடரில் 3 கிரிக்கெட் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

Rishabh-Pant

- Advertisement -

முன்னதாக இத்தொடரில் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விலகியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் என்னதான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தோனியை மிஞ்சி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ள அவர் 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார். குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்கும் காபா மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய அவர் காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

கபில் தேவ் கோபம்:
அத்துடன் பெரும்பாலான போட்டிகளில் அதிரடியாக விளையாடக் கூடிய அவர் நேதன் லயன் போன்ற தரமான ஸ்பின்னர்களை தெறிக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்து ஒரு மணி நேரத்தில் வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாகவும் கருதப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்த தொடரில் இல்லாததால் அவரிடத்தில் சூரியகுமார், இஷான் கிசான், கேஎஸ் பரத் ஆகியோரில் யாரை விளையாட வைக்கலாம் என்ற குழப்பம் இந்திய அணியில் ஏற்பட்டது.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

இந்நிலையில் ரிஷப் பண்ட் குணமடைந்ததும் அவரது கன்னத்தில் அறைந்து நீங்கள் ஏன் பொறுப்பின்றி நடந்து கொண்டீர்கள் உங்களால் மொத்த இந்திய அணியும் நிலைகுலைந்துள்ளதை பாருங்கள் என்று கேட்பேன் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதங்கமாக பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு. “நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன். இருப்பினும் அவர் குணமடைந்து வந்ததும் அவரை சந்தித்து கன்னத்தில் அறைந்து உங்களால் இந்திய அணி நிலை குலைந்துள்ளதை பாருங்கள் என்று தெரிவிப்பேன். உங்களது காயம் மொத்த அணியின் கலவையையும் மாற்றியுள்ளதை பாருங்கள் என்று அவரிடம் கூறுவேன்”

- Advertisement -

“அந்த அன்பு தான் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்மிடையே தோன்ற வைக்கிறது. இது போல இன்றைய இளைஞர்களிடம் நிறைய தவறுகள் காணப்படுகிறது. குறிப்பாக இளம் பையன்கள் இவற்றை செய்யும் போது அவர்களை நாம் அடித்து திருத்த வேண்டும்” என்று கூறினார். முன்னதாக கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று டேராடூனிலிருந்து வீடு திரும்பிய ரிஷப் பண்ட் தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் அதிகாலை வேகமாக பயணித்த போது ஒரு கட்டத்தில் துரதிஷ்டவசமாக தூக்கக் கலக்கத்தை சந்தித்து விபத்திற்குள்ளானார்.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் விபத்தை சந்திப்பதற்கு அதிவேகமாக காரை ஓட்டியது முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு சாட்சியாக அதிவேகமாக அவர் பயணித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது போது ரிஷப் பண்ட் சற்று மெதுவாக காரை இயக்கி இருக்க வேண்டும் என்று ரசிகர்களே தெரிவித்தார்கள். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தாலும் மீண்டும் களத்திற்கு திரும்புவதற்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் தேவைப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: IND vs AUS : மீண்டும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான கே.எல் ராகுல் – முதல் போட்டியிலேயே இப்படியா?

அதனால் பொதுவாகவே ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கக்கூடிய ரிஷப் பண்ட் இல்லாதது ஆஸ்திரேலிய அணியினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீங்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற பொறுப்பை உணராமல் வேகமாக பயணித்து விபத்திற்குள்ளானது தமக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் கொடுப்பதாக கபில் தேவ் வெளிப்படையாக அக்கறையுடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement