IND vs AUS : அடிக்குறான் பாரு, வேகமா போடு. தமிழில் டிப்ஸ் கொடுத்த தினேஷ் கார்த்திக் – அஷ்வின் அளித்த பதில்

Dinesh Karthik
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றிற்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் இன்னும் சில தினங்களில் விளையாட இருக்கின்றன. அதற்கு முன்னதாக தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளுக்கு இடையே தலா இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது.

INDvsAUS

- Advertisement -

இந்த பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ராகுல் 57 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 50 ரன்கள் குவித்தனர். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் அஷ்வின் பந்து வீசிக்கொண்டிருந்த போது தமிழில் கொடுத்த அறிவுரைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ravichandran Ashwin

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் வருண் சக்கரவர்த்திக்கு தமிழில் அட்வைஸ் கொடுத்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் தற்போது ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து அஷ்வினுக்கும் தமிழில் அறிவுரை வழங்கியது பெருமளவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அதிலும் குறிப்பாக இன்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது பேட்ஸ்மன்களுக்கு ஏற்ப : “பந்தை இப்படி போடு”, “அப்படி போடு”, “அவன் ஈஸியா கண்டுபிடிச்சு அடிக்கிறான்”, “மாத்தி போடு” என பல்வேறு ஆலோசனைகளை தமிழில் பேட்ஸ்மன்களுக்கு புரியாதபடி தினேஷ் கார்த்திக் வழங்கினார்.

- Advertisement -

அதனை கேட்ட அஸ்வினும் “இந்த மாதிரி மேட்ச்ல தான் ட்ரை பண்ணி பார்க்க முடியும்”, “பார்ப்போம் கவலைப்பட வேண்டாம்” என தினேஷ் கார்த்திக்கு மீண்டும் ரிப்ளை செய்தார் அதன் பிறகும் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் தோல்வி வரக்கூடாது. அவன் “கொஞ்சம் அடித்து ஆடட்டும்”, “நீ குத்தி போடு வேகமா போடு” என்று தொடர்ச்சியாக தமிழில் அறிவுரை கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதையும் படிங்க : என்னை மிஸ் பண்றிங்களா – உள்ளூர் தொடரில் ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக், வீடியோ உள்ளே

அவர்களது அவர்கள் இருவரது இந்த உரையாடல் பார்ப்பதற்கே அவ்வளவு சுவாரசியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தினேஷ் கார்த்திக் தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, இங்கிலீஷ் என மாற்றி மாற்றி பேசக்கூடியவர் என்பதனால் அனைத்து மொழிகளிலும் இன்றைக்கு மைதானத்தில் பேசிக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement