என்னை மிஸ் பண்றிங்களா – உள்ளூர் தொடரில் ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக்

UMran Malik
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அக்டோபர் 14ஆம் தேதியன்று நடைபெற்ற லீக் போட்டியில் மகாராஷ்டிராவை எதிர்கொண்ட ஜம்மு காஷ்மீர் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 175/5 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அப்துல் சமத் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 55 (33) ரன்களும் தொடக்க வீரர் கஜாரியா 8 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (28) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 176 ரன்களை துரத்திய மகராஷ்டிரா அணிக்கு ராகுல் திரிபாதி அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்சருடன் 59 (32) ரன்களும் இதர வீரர்கள் கணிசமான ரன்களையும் எடுத்து கடைசி ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

அதனால் மொகாலியில் நடைபெற்ற அப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் சார்பில் இதர பவுலர்களை காட்டிலும் 4 ஓவரில் 27 ரன்களை மட்டும் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து 6.75 என்ற சிறப்பான எக்கனாமியில் அபாரமாக பந்து வீசிய இளம் வீரர் உம்ரான் மாலிக்கின் போராட்டம் வீணானது. அந்த அணிக்காக இதே போல் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்ட அவர் கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி தொடர்ச்சியாக 140 கி.மீ வேகத்தில் பந்து வீசி அப்போதைய கேப்டன் விராட் கோலி உட்பட அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

- Advertisement -

எக்ஸ்பிரஸ் வேகம்:
அதனால் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு இந்த வருடம் ஹைதராபாத் நிர்வாகம் தக்க வைத்த அவர் முழுமையான வாய்ப்பை பெற்று முந்தைய சீசனை மிஞ்சும் வகையில் பெரும்பாலான போட்டிகளில் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் அதிரடியாக பந்து வீசி உலக அளவில் கிளன் மெக்ராத், பிரட் லீ போன்ற ஜாம்பவான்கள் திரும்பிப் பார்க்க வைத்தார். குறிப்பாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 வேகத்தில் வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக வரலாற்றுச் சாதனை படைத்தார்.

மேலும் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தனது வேகத்தால் தெறிக்க விட்ட அவர் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அப்படி இந்திய ஆடுகளங்களிலேயே மிரட்டும் அவர் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் நிச்சயம் அசத்துவார் என்ற கண்ணோட்டத்தில் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யுமாறு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

அந்த நிலையில் அதன் பின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் தேர்வானாலும் வாய்ப்பு பெறாத அவர் அயர்லாந்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் போட்டியில் கடைசி ஓவரில் அபாரமாக பந்து வீசி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற உதவினார். இருப்பினும் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் வேகத்தை மட்டுமே நம்பி பந்து வீசிய அவர் லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றாமல் ரன்களை வாரி வழங்கியதால் இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட 2வது வாய்ப்புடன் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இருப்பினும் ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைவருமே தடுமாறுவார்கள் என்ற நிலையில் வெறும் 2 போட்டிகளை வைத்து அவரது தரத்தை தீர்மானிக்க முடியாது என்று கூறிய திலிப் வெங்சர்கார் போன்ற முன்னாள் வீரர்கள் காயமடைந்த பும்ராராவுக்கு பதில் உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இருப்பினும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட வாய்ப்பை பெறாத அவரை போன்ற சூப்பர் காரை ஓர்க் ஷாப்’பிலேயே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா வந்துள்ளது தமக்கு ஆச்சரியமளிப்பதாக பிரட் லீ, வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் சமீபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் இப்போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்க விட்டதை போலவே சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காகவும், துலீப் ட்ராபியில் வடக்கு மண்டல அணிக்காகவும் மிரட்டிய உம்ரான் மாலிக் உலக கோப்பையில் நெட் பந்துவீச்சாளராக விளையாட காத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விசா கிடைக்காததால் பின்னடைவை சந்தித்த அவர் தற்போது உள்ளூர் தொடரில் விளையாடி வருகிறார். அப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் வேகத்துடன் விவேகத்தையும் கற்று வரும் அவர் இதே போல் செயல்படும் பட்சத்தில் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு தாமாக முன்வந்து அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement