
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான சுப்மன் கில் சுப்மன் கில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளுக்கும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு துவக்க வீரர்க்கான வாய்ப்பினை பெற்றார். மூன்று வகையான அணிக்கும் எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் கில்லுக்கு இந்த பதவியை பிசிசிஐ அளித்திருந்தது. ஆனால் டி20 போட்டிகளில் துணை கேப்டனாக அவர் கம்பேக் கொடுத்திருந்தாலும் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கி சொற்ப ரன்களை மட்டுமே அடித்து தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தார்.
இதன் காரணமாக சஞ்சு சாம்சன் மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற ஆதரவு குவிந்தது. ஏனெனில் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் இந்த ஆண்டு மட்டும் 3 சதங்களை அடித்து அசத்தியிருந்தார். அதோடு அவர்கள் இருவரும் தொடர்ந்து இந்திய அணிக்கு அதிரடியான துவக்கத்தை வழங்கியது பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறவும் உதவியது.
இதனால் பேட்டிங் தடுமாறும் கில்லை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சன் களமிறங்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் தடுமாறிய சுப்மன் கில் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட வேளையில் மீண்டும் சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கினார்.
அதனை தொடர்ந்து வெளியான 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இடம் பிடித்துள்ளார். இஷான் கிஷனை பேக்கப் வீரராக தேர்வு செய்தது சரிதான் என்றாலும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற ஒரு திறமையான வீரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என முன்னாள் இந்திய வீரரான திலீப் வெங்சர்க்கார் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக தனக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் பிரமாதமாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தை பிடித்து விட்டாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் மிகப் பிரமாதமாக விளையாடியும் அவர் அணியில் சேர்க்கப்படாது நிச்சயம் அவருக்கு வருத்தத்தை அளித்திருக்கும்.
இதையும் படிங்க : கம்பீருக்கு பதில் லக்ஷ்மன் இந்திய டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமிக்கப் படுகிறாரா? பிசிசிஐ செயலாளர் பதில்
அதேபோன்று ஜெய்ஸ்வால் போன்ற ஒரு இளம் வீரர்களுக்கு தேவையான நேரத்தில் வாய்ப்பினை வழங்கி ஆதரவு தரவில்லை எனில் நிச்சயம் அவர்களின் நம்பிக்கையை உடைந்து விடும். அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக அவரே தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது எனக்கு வருத்தம் தான் என திலீப் வெங்சர்க்கார் கூறியது குறிப்பிடத்தக்கது.