கம்பீருக்கு பதில் லக்ஷ்மன் இந்திய டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமிக்கப் படுகிறாரா? பிசிசிஐ செயலாளர் பதில்

Devjith Saikia
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கௌதம் கம்பீர் விலக வேண்டுமென்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். கடந்த வருடம் பொறுப்பேற்ற அவரது தலைமையில் இந்தியா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நிலையாக அசத்தி வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தலைமையில் வங்கதேசத்துக்கு எதிராக 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா எதிர்பார்த்த வெற்றியை பெற்றது.

ஆனால் அடுத்து நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் 0 – 3 (3) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது. அதே காரணத்தால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.

- Advertisement -

கம்பீர் மாற்றப்படுகிறாரா:

அதனால் விராட், ரோஹித்தை கழற்றி விட்ட இந்திய அணி இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. ஆனால் அடுத்ததாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் 0 – 2 (2) என்ற கணக்கில் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் படுதோல்வியது சந்தித்தது.

அந்த தோல்விக்கு சோதனை என்ற பெயரில் கௌதம் கம்பீர் செய்யும் மாற்றங்கள் தவறான தேர்வுகள் முக்கிய காரணமானது. எனவே டெஸ்ட் அணியில் அவரை பயிற்சியாளர் பதிவிலிருந்து நீக்குமாறு இந்திய ரசிகர்களே விமர்சித்தனர். அந்த நிலையில் தோல்விகளைக் கருத்தில் கொண்ட பிசிசிஐ விவிஎஸ் லக்ஷ்மனை இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

- Advertisement -

செயலாளர் மறுப்பு:

தற்போது என்சிஏ இயக்குனராக இருக்கும் லக்ஷ்மன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பெசலிஸ்ட் வீரராக அறியப்படுகிறார். எனவே அவரை பிசிசிஐ டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் அந்த செய்தி வெறும் வதந்தி என்று பிசிசிஐ செயலாளர் தேவஜீத் சைக்கியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒற்றை கையில் பிடித்த ரசிகருக்கு ஜாக்பாட் பரிசு இத்தனை கோடியா.. தெ.ஆ வாரியம் கலக்கல் அறிவிப்பு

இது பற்றி ஆஜ்டக் எனும் இந்திய தொலைக்காட்சியில் அவர் தெரிவித்தது பின்வருமாறு. “பிசிசிஐ அந்த செய்திகளை மறுக்கிறது, அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அந்த செய்திகள் யூகங்கள் கற்பனைகள் வாயிலாக வந்திருக்கின்றனர். உண்மையில் அது தவறானது” என்று கூறினார். ஏற்கனவே களத்தில் இந்திய வீரர்கள் ஒழுங்காக விளையாடாததால் பயிற்சியாளர் என்ன செய்ய முடியும் என்று தென்னாப்பிரிக்க தொடரின் முடிவில் அவர் கூறியிருந்தார். தற்போது மீண்டும் கம்பீருக்கு அவர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement