இன்னும் அவர் எத்தனை சதங்கள் அடிக்கணும் – இளம் வீரருக்காக தேர்வு குழுவினரிடம் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கேள்வி

Dilip
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் 2 பகுதிகளாக நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அதில் தமிழகம் போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் சிறப்பாக செயல்பட்ட அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து இந்த தொடரின் நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் முதல் பகுதியான காலிறுதிப் போட்டிகள் கடந்த ஜூன் 6-ஆம் தேதியன்று துவங்கின. அதில் கத்து குட்டியான உத்தரகாண்ட்டை வதம் செய்த மும்பை 725 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாதனை வெற்றியுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

sarfaraz 2

- Advertisement -

அதை தொடர்ந்து உத்தரபிரதேச அணிக்கு எதிராக 2-வது அரையிறுதிப் போட்டியில் தற்போது அந்த அணி விளையாடி வருகிறது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் மும்பைக்காக விளையாடி வரும் 24 வயது இளம் வீரர் சர்ப்ராஸ் கான் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் முழுமூச்சுடன் பேட்டிங் செய்து உள்ளூர் கிரிக்கெட்டில் மலைபோல ரன்களை குவித்து வருகிறார்.

மிரட்டும் சர்ப்ராஸ்:
குறிப்பாக இந்த வருட ரஞ்சி கோப்பையில் 275, 63, 48, 165, 153 என அரை சதங்களையும், சதங்களையும், இரட்டை சதமும் அடித்து வரும் அவர் தற்போது நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் கூட 40 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் கடைசியாக களமிறங்கிய 14 இன்னிங்சில் 1664 ரன்களை குவித்துள்ள அவர் 3 அரை சதம், 6 சதம், 6 150 ரன்கள், 3 இரட்டை சதங்கள் என ஒரு மெஷினைப் போல ரன்களை வெளுத்து வாங்கி வருகிறார். இப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு வந்தாலும் இந்திய தேர்வு குழுவினர் அவரை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

Sarfaraz-khan-2

ஆனால் இந்த அளவுக்கு அற்புதமாக பேட்டிங் செய்து வரும் அவருக்கு ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுப்பதற்கு தகுதியானவராக ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபித்து வருகிறார். இருப்பினும் அணியில் தேர்வு செய்து பெஞ்சில் கூட அமரும் வாய்ப்பை வழங்காத இந்திய தேர்வு குழுவினர் அவரை தொடர்ச்சியாக புறக்கணித்து வருவது நிறைய முன்னாள் இந்திய வீரர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

வெங்சர்க்கார் கேள்வி:
இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாட இன்னும் சர்பராஸ் கான் எத்தனை சதங்கள், ரன்கள் அடிக்க வேண்டும் என்று இந்திய தேர்வு குழுவினருக்கு முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி முன்னாள் இந்திய தேர்வு குழு தலைவரான அவர் பேசியது பின்வருமாறு. “அவர் தற்சமயத்தில் இந்தியாவுக்காக விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். அவர் ரஞ்சி கோப்பையில் ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் ரன்கள் அடிக்கிறார். ஆனால் இன்னும் தேர்வுக் குழுவினர் திருப்தி அடையவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்திய அணிக்குள் நுழைய அவர் இன்னும் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு வருடமும் அவர் மும்பைக்காக 800 ரன்களை அடித்து வருகிறார்”

dilip

“அவரை 12 வயதிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் எப்போதும் வெற்றிக்காக பசியுடன் விளையாடி வருகிறார். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதுடன் நீண்ட இன்னிங்ஸ் விளையாடும் திறமை கொண்டவர். போட்டியை வெல்லும் தன்மையையும் பெற்றுள்ள அவர் அரிதான பண்பை பெற்றுள்ளார். அவர் சுழல் பந்து வீச்சுக்கு எதிராகவும் ரன்களை அடித்துள்ளார் வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் வெளுத்து வாங்கியுள்ளார்.

- Advertisement -

எனவே தொடர்ச்சியாக ரன்களை விளாசும் அவர் இன்னும் என்ன செய்ய வேண்டும்? 4-வது கியரில் ரன்களை அடிக்கும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது விருந்தாகும்” என்று பாராட்டினார். அவர் கூறுவது நியாயம் என்றாலும் இந்திய டெஸ்ட் அணியில் தற்போது விராட் கோலி, புஜாரா, ரோகித் சர்மா என மூத்த மூத்த வீரர்கள் இருப்பதால் விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர் போன்ற அணிக்குள் காலடி வைத்த வீரர்களுக்கே தேவையான வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதையும் படிங்க : IND vs RSA : யார் சொல்றதையும் கேக்க முடியாது. டாஸின் போதே தில்லான முடிவை கையில் எடுத்த – ரிஷப் பண்ட்

அதனால்தான் அவரை இந்திய தேர்வு குழுவினர் பெஞ்சில் அமர வைக்க வேண்டாம் உள்ளூர் கிரிக்கெட்டிலாவது தொடர்ந்து ரன்கள் அடிக்கட்டும் என்ற நோக்கத்தில் தேர்வு செய்யாமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

Advertisement