டி20 உலகக்கோப்பை : பும்ராவிற்கு பதிலாக இவரைத்தான் தேர்வு செய்திருப்பேன் – திலீப் வெங்சர்க்கார் அதிரடி

Dilip-Vengsarkar
- Advertisement -

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் முக்கிய வீரராக இடம்பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட அவர் வலைப் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவார் என்று முன்னர் கூறப்பட்டது.

Bumrah

- Advertisement -

பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காயம் குணம் அடைய நான்கு முதல் ஆறு மாத காலம் வரை ஆகும் என்பதனால் அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் அவர் விளையாட மாட்டார் என்ற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு பதிலாக விளையாடப் போகும் வீரர் யார்? என்பதே தற்போது அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக டி20 உலக கோப்பை அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம் பெற்றுள்ள முகமது ஷமி அல்லது தீபக் சாகர் ஆகிய இருவரில் ஒருவர் பும்ராவிற்கு பதிலாக இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான திலிப் வெங்சர்க்கார் வித்தியாசமான ஒரு கருத்தினை கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

Umran Malik

இந்திய அணியில் காயம் அடைந்த ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு பதிலாக நானாக இருந்திருந்தால் உம்ரான் மாலிக்கை தான் தேர்வு செய்திருப்பேன். ஏனெனில் அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. இந்தியாவில் ஒருவர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார் என்றால் அவரிடம் உள்ள திறமைக்கு நிச்சயம் அவர் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மிக அதிவேகமாக பந்து வீசும் திறமையும் வைத்திருப்பார்.

- Advertisement -

அப்படி பார்க்கையில் ஆஸ்திரேலிய மைதானங்களில் அவருடைய வேகம் இன்னும் கூடுதலாக இருக்கும். என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கு தற்போது மீடியம் வேகத்தில் வீசுபவர்களை விட அதிவேகத்தில் பந்து வீசும் பவுலர்களே தேவை. அந்த வகையில் அதிவேகமாக பந்து வீசும் ஒரு பவுலரால் நிச்சயம் பேட்ஸ்மன்களுக்கு சிரமத்தை அளிக்க முடியும். அந்த வகையில் என்னை பொறுத்தவரை உம்ரான் மாலிக்கை தான் நான் இந்திய உலக கோப்பை அணியில் எடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பும்ராவின் காயத்துக்கு அவசரபோக்கே காரணம் – பிசிசிஐயை விளாசும் முன்னாள் பாக் வீரர்

22 வயதான இளம் வீரர் உம்ரான் மாலிக் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதோடு இந்திய அணிக்காகவும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement