பும்ராவின் காயத்துக்கு அவசரபோக்கே காரணம் – பிசிசிஐயை விளாசும் முன்னாள் பாக் வீரர்

IND Japrit Bumrah
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிலிருந்து நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து வெளியேறியுள்ளது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர் தன்னுடைய வித்தியாசமான பௌலிங் ஆக்சனை வைத்து உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்களை திணறடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

Bumrah

- Advertisement -

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பக் கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் கடைசி நேரத்தில் வெளியேறியுள்ளது இந்திய ரசிகர்களின் உலக கோப்பை கனவை தகர்த்துள்ளது என்றே கூறலாம்.

ஏனெனில் அவரை தவிர்த்து டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் 140 கி.மீ வேகத்தில் பந்து வீசினால் மட்டுமே சமாளிக்ககூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக்கூடியவர்களாக உள்ளனர். அதைவிட 19வது ஓவர் போன்ற கடைசி கட்ட ஓவர்களில் வள்ளலாக ரன்களை வாரி வழங்குவதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

Jasprit Bumrah

அவசரபோக்கே காரணம்:
முன்னதாக இது போன்ற முக்கிய தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காகவே இந்த வருடம் அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற முக்கியமில்லாத தொடர்களில் ஓய்வெடுத்த பும்ரா சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த நிலையில் அவரில்லாமல் ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தது. மேலும் காயத்திலிருந்து குணமடைந்த அவர் உலக கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

அதிலும் மொஹாலி போட்டியில் ஓய்வெடுத்த அவர் எஞ்சிய 2 போட்டிகளில் விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். ஆனால் இந்த இருதரப்பு தொடர்களை வென்று பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் அவரை அவசரப்படுத்தியதே காயத்திற்கு காரணமென்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்காக அவ்வப்போது ஓய்வெடுக்கும் பும்ராவை ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட பிசிசிஐ எப்படி அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

MI Jaspirt Bumrah

மேலும் தம்மை பொறுத்தவரை பும்ரா உலக கோப்பையில் நேரடியாக விளையாடியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “காயத்துக்கு பின் ஒருவேளை டி20 உலகக் கோப்பையில் நேரடியாக அவர் (பும்ரா) விளையாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் அவர் ஃபார்முக்கு திரும்ப உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி போட்டிகளில் விளையாடுவதே போதுமான நல்ல வாய்ப்பாகும். ஏனெனில் பார்முக்கு திரும்ப அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதற்கு அவர் ஒன்றும் ஹர்ஷல் படேல் போன்ற பவுலர் கிடையாது. மேலும் முதுகுப்புற காயத்தை ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் சந்தித்துள்ளார்”

- Advertisement -

“இப்படி காயமடைந்த அவர் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் எப்போதும் விளையாடுகிறார். ஆனால் அந்த சமயங்களில் பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் அவரை முழுமையாக கண்காணித்து தேவையான ஓய்வை கொடுத்திருக்க வேண்டும். தற்சமயத்தில் அவர் திரும்புவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை மருத்துவக்குழு தெரிவிக்கும் வரை காத்திருப்போம். ஒருவேளை அவர் விலகினால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய புவனேஸ்வர் குமார் கடந்த சில போட்டிகளில் நிறைய ரன்களை வழங்கினார். அதனால் இந்திய அணி அவரை சார்ந்திருக்க முடியாது”

Kaneria

“ஏனெனில் அவர் ஸ்விங் ஆகாத சூழ்நிலைகளில் எந்த பயனையும் கொடுக்க மாட்டார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் நீங்கள் அதிகப்படியான ஸ்விங் எதிர்பார்க்க முடியாது. அங்கு கடினமான பிட்ச்கள் தான் இருக்கும். எனவே சுமாரான பார்மில் தடுமாறும் அவர் கடைசி கட்ட ஓவர்களில் பந்து வீசுவதற்கு தகுதியானவராக இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில் சஹாலுக்கு பதில் விளையாட அஷ்வின் சரியானவர் என்று சொல்வதற்கான 3 காரணங்கள்

மொத்ததில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது உலகக் கோப்பையில் கடைசி கட்ட ஓவர்களில் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கப் போகிறது என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement