டி20 உலக கோப்பையில் சஹாலுக்கு பதில் விளையாட அஷ்வின் சரியானவர் என்று சொல்வதற்கான 3 காரணங்கள்

Chahal and Ashwin
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக இறுதி கட்டமாக இந்தியா தயாராகி வருகிறது. முன்னதாக கடந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோற்காம நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா மினி உலகக் கோப்பை போன்ற ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. அத்தொடரில் முதன்மை சுழல் பந்துவீச்சாளரான பவுலரான யுஸ்வென்ற சஹால் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசாத நிலையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரிலும் சுமாராகவே செயல்பட்டார்.

Chahal

- Advertisement -

கடந்த 2021 உலக கோப்பைக்கு முன்பாக இதே போல் செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்து இந்த உலகக் கோப்பைக்கு தேர்வாகியுள்ளார். ஆனால் உலகக் கோப்பைக்கு இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்குப் அதில் தமிழகத்தின் அஷ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அதில் 4 ஓவர்களில் வெறும் 8 ரன்களை கொடுத்த அஷ்வின் அசத்தலாக செயல்பட்டார். அந்த வகையில் உலக கோப்பையில் விளையாடும் 11 பேர் அணியில் சஹாலுக்கு பதில் அஷ்வின் விளையாட தகுதியானவர் என்று சொல்வதற்கான 3 காரணங்களை பற்றி பார்ப்போம்:

ashwin 1

1. தற்போதைய பார்ம்: கிரிக்கெட்டில் என்னதான் ஜாம்பவனாக இருந்தாலும் தற்சமயத்தில் வைத்திருக்கும் பார்ம் முக்கியமாகும். அந்த வகையில் ஒரு காலத்தில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்து 2017க்குப்பின் மொத்தமாக கழற்றிவிடப்பட்ட அஷ்வின் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் 2021 உலக கோப்பையில் ஆச்சர்யப்படும் வகையில் 4 வருடங்கள் கழித்து தேர்வானார்.

- Advertisement -

அதில் முழுமையாக வாய்ப்பு பெறாவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் கடந்த உலகக்கோப்பைக்குப்பின் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 5.73 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து நல்ல பார்மில் இருக்கிறார். மறுபுறம் அதே காலகட்டத்தில் 20 போட்டிகளில் விளையாடிய சஹால் 22 விக்கெட்களை 7.75 என்ற எக்கனாமியில் எடுத்து தடுமாறுகிறார்.

Ashwin-3

ஆனாலும் சில முன்னாள் வீரர்கள் விக்கெட் எடுப்பவராக இருப்பதில்லை என்ற குற்றத்தை அஷ்வின் மீது வைக்கின்றனர். இருப்பினும் இதுபோல் துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை போட்டாலே விக்கெட்டுகள் தாமாக வரும் என்பதுடன் சஹாலை விட 2015 உலக கோப்பை உட்பட ஆஸ்திரேலிய மண்ணில் பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவம் அஷ்வினுக்கு ஏராளமாக உள்ளது. எனவே நல்ல பார்ம், அனுபவம் கொண்டுள்ள அவருக்கு முன்னுரிமை கொடுப்பதே வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

2. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தன்னுடைய லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதில் வலுவான பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அனுபமுள்ள அஷ்வின் சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம்.

ashwin

ஏனெனில் பொதுவாகவே இடதுகை பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடும் திறமை பெற்றுள்ள அவர் அந்த 2 அணிகளில் உள்ள டீ காக், மில்லர், ரோசவ், நவாஸ், ஷான் மக்சூட், குஷ்தில் ஷா போன்ற இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். மறுபுறம் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் போன்ற இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கூட சஹால் தடுமாறக்கூடியவர் என்பதால் அஷ்வின் இந்திய அணிக்கு பொருத்தமாக இருப்பார்.

- Advertisement -

3. பேட்டிங் ஆழம்: சஹாலுக்கு பேட்டிங் பெரிய அளவில் தெரியாது என்ற நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை அடித்து தன்னை நல்ல பேட்ஸ்மேனாக ஏற்கனவே நிரூபித்துள்ள அஷ்வின் 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் ஜோஸ் பட்லருடன் டாப் ஆர்டரில் களமிறங்கி கேரியரில் முதல் முறையாக அரைசதம் அடித்து 191 ரன்களை 141.48 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி ஆல்-ரவுண்டராக செயல்பட்டார். அந்த வகையில் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார் என்பதுடன் ஆஸ்திரேலிய மைதானங்கள் சுழலுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதையும் அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க : பும்ரா இல்லாம இந்த ஒரு விஷயத்துல இந்திய அணி நிச்சயம் கஷ்டப்படும் – சபா கரீம் எச்சரிக்கை

அப்படிப்பட்ட நிலையில் பேட்டிங் தெரியாத சஹாலை தேர்வு செய்து ஒரு இடத்தை வீணடிப்பதற்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் அனுபவ ஸ்பின்னராக இருப்பதுடன் நல்ல பேட்டிங் பார்மிலும் இருக்கும் அஷ்வினை சேர்ப்பது இந்திய பேட்டிங் வரிசையின் ஆழத்தையும் அதிகப்படுத்தி வெற்றிக்கு வித்திடும்.

Advertisement