டி20 உலகக்கோப்பை அணியில் இந்த 3 பேருக்கும் சேன்ஸ் குடுத்திருக்கனும் – திலீப் வெங்சர்க்கார் பேட்டி

Dilip
- Advertisement -

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் கடந்த திங்கள் கிழமை அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு கூடுதலாக நான்கு ஸ்டான்ட் பை வீரர்களையும் அறிவித்திருந்தது. கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியானது உலக கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

IND

- Advertisement -

ஆனால் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் உலகக்கோப்பை தொடரிலும் இடம் பெற்றுள்ளதால் அணி தேர்வு குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றன. மேலும் அணி தேர்வு குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு சேர்மேனான திலீப் வெங்சர்க்கார் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்க வேண்டிய மூன்று வீரர்கள் குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :

Shubman Gill

இந்திய டி20 உலகக் கோப்பை அணியை நான் தேர்வு செய்திருந்தால் நிச்சயம் முகமது ஷமி, உம்ரான் மாலிக் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பினை வழங்கி இருப்பேன். ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் இந்த மூவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

- Advertisement -

அதோடு அவர்கள் நல்ல பார்மிலும் இருப்பதனால் டி20 உலககோப்பை தொடரில் நிச்சயம் விளையாடி இருக்க வேண்டிய வீரர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் நான்காம் இடத்தில் விளையாடும் வீரர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் : சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும்.

இதையும் படிங்க : 20 வருஷம் ஆச்சி. இனிமே நான் செய்யப்போறது இதுதான் – ஓய்வை அறிவித்து ராபின் உத்தப்பா உருக்கம்

ஏனெனில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன் ரேட்டை மெயின்டைன் செய்ய அவரால் நிச்சயம் முடியும். அதனால் அவரே நாலாவது இடத்தில் விளையாட வேண்டும். மேலும் இந்திய அணி தற்போது பேட்டிங் வரிசையின்படி பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement