20 வருஷம் ஆச்சி. இனிமே நான் செய்யப்போறது இதுதான் – ஓய்வை அறிவித்து ராபின் உத்தப்பா உருக்கம்

Uthappa
- Advertisement -

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் கடந்த 2004-ஆம் ஆண்டு விளையாடி இருந்தார். அந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக 2006-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 2015 வரை 46 ஒருநாள் போட்டிகள், 13 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதோடு 2007-ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் போதும் அவர் அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ராபின் உத்தப்பா இதுவரை 205 போட்டிகளில் விளையாடி 4952 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் டாப் 10-க்குள் இருக்கிறார். மிகச் சிறப்பான அதிரடி ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் மற்றும் இந்திய அளவிலான அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பல உருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பிடப்பட்டதாவது : நான் தொழில் முறை கிரிக்கெட்டை விளையாட துவங்கி 20 ஆண்டுகள் ஆகிறது. எனது நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும் விளையாடியது மிகப்பெரிய கௌரவம்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து நான் கடந்து வந்துள்ளேன். இது ஒரு அருமையான பயணம் இருப்பினும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வர வேண்டும். அந்த வகையில் நன்றியுள்ள இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வகையான வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஓய்விற்கு பிறகு என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளேன். அதோடு என் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை பட்டியலிடவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுடன் விளையாடியது மகிழ்ச்சி. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் மற்றும் கேரளா கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றிற்கும் நன்றி அதோடு இறுதியில் நான் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

இதையும் படிங்க : ஐபிஎல் ஆழம் பாத்தாச்சு, இனி உலக டி20 தொடர்களை வெற்றிக்கொள்ள மும்பை அறிவித்த சூப்பர் பிளான் – முழுவிவரம்

அவர்களுடன் நான் இருந்த காலத்தில் நான் பெற்ற நினைவுகளை எப்போதும் மறக்க மாட்டேன் என்று உருக்கமான பல தகவல்களை ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார். ஏற்கனவே சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து அனைத்து வகையான வடிவத்தில் இருந்தும் ஓய்வை அறிவித்த வேளையில் ராபின் உத்தப்பாவும் ஓய்வினை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement