அவ்ளோதான், உங்களுக்கு டி20 உ.கோ வாய்ப்பு கடினம் – சிஎஸ்கே வீரரை மீண்டும் வம்பிழுக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் தற்சமயம் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்காக தயாராகும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் அந்த உலகக் கோப்பைக்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறியும் வகையில் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் அற்புதமாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் வீரர்களுடன் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் ஆரம்பத்தில் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அதன்பின் கொதித்தெழுந்து தொடரை சமன் செய்தது.

IND vs RSA Pant Chahal

- Advertisement -

அதைத் தொடர்ந்து வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல் போன்ற முக்கிய முதுகெலும்பு நட்சத்திர வீரர்கள் களமிறங்குவது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. அவர்களுடன் விளையாடப் போகும் இதர இந்திய வீரர்களை கண்டறியும் முயற்சியில் தான் தற்போது இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

சறுக்கிய ஜடேஜா:
ரோஹித் சர்மா, விராட் கோலி போலவே ஆல்-ரவுண்டர் பிரிவில் 2019 உலகக் கோப்பைக்குப் பின்பு 3 வகையான இந்திய அணியிலும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக மிகப்பெரிய எழுச்சி கண்ட ரவீந்திர ஜடேஜா தனது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் தவிர்க்க முடியாத வீரராக நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். சமீப காலங்களில் இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் அட்டகாசமாக செயல்பட்ட அவர் உலக அளவில் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களுடன் போட்டி போடும் அளவுக்கு நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக ஜொலித்து வருகிறார்.

Jadeja

அப்படி அற்புதமாக செயல்பட்டு வந்த அவரிடம் ஐபிஎல் 2022 தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்பை எம்எஸ் தோனி நம்பி வழங்கியது இறுதியில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து தேவையற்ற முடிவாக மாறியது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அவரது தலைமையில் வரலாற்றில் 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சென்னை வெளியேறியது. அதைவிட அனுபவமில்லாத கேப்டன்ஷிப் அழுத்தம் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அவரின் ஆட்டத்தை மொத்தமாக முடக்கியது.

- Advertisement -

சான்ஸ் கடினம்:
அதனால் அந்த பொறுப்பே வேண்டாம் சாதாரண வீரராக விளையாடினால் போதும் என்ற தைரியமான முடிவை எடுத்த அவர் பாதியிலேயே அந்த பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அடுத்த போட்டியில் காயமடைந்த அவர் மொத்தமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதுடன் சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரிலும் பங்கேற்கவில்லை. ஒரு கட்டத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்திருந்த அவர் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1இல் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினாலும் டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Dinesh Karthik and Hardik Pandya

ஏனெனில் அவர் இல்லாத சமயத்தில் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவும் பினிஷெராக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும் அற்புதமாக செயல்பட்டு தங்களது இடத்தை உறுதி செய்துள்ளார்கள். இந்நிலையில் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் வந்துள்ளதால் டி20 உலக கோப்பையில் ரவீந்திர ஜடேஜா இடம் பிடிப்பது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“6 மற்றும் 7-வது இடத்தில் ஒரு முழு பேட்ஸ்மேனாக தம்மால் விளையாட முடியும் என்று தினேஷ் கார்த்திக் தெளிவாக நிரூபித்துள்ளார். போட்டியில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் அபாரமாக இருந்ததை சமீபத்திய ஐபிஎல் மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் தெளிவாகப் பார்த்தோம். எனவே ரவீந்திர ஜடேஜா மீண்டும் தனக்கான இடத்தை பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அவரது இடத்தில் இந்தியா அக்சர் பட்டேலுக்கு உறுதியான வாய்ப்பளிக்கலாம். லோயர் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவுடன் தினேஷ் கார்த்திக் இருப்பார். மேலும் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் இருப்பார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. ஆனால் ஜடேஜாவை போன்ற ஒரு வீரர் தேர்வு குழுவினருக்கு தலைவலியை கொடுப்பார்” என்று கூறினார்.

Sanjay

என்னதான் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருந்தாலும் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் அக்சர் பட்டேல் சுமாராகவே செயல்பட்டார். அவரைவிட பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கலக்கக்கூடிய ஜடேஜா உலகிலேயே நம்பர் 1 பீல்டராக இருப்பதால் இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு கங்குலி என்னை அழைத்தார், ஆனால் அந்த பயத்தால் போகல – ரமீஸ் ராஜா ஓபன்டாக்

ஆனால் அவரை ஒவ்வொரு முறையும் இப்படி ஏடாகூடமாக பேசி வம்பிழுப்பதை தொடர்கதையாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வைத்துள்ளதும் அதற்கு 2019 உலகக்கோப்பை ஆட்டத்தை போல ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து பதில் சொல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

Advertisement