- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் இடம் கொடுக்கலனா என்ன? நான் இதை எப்போவும் நிறுத்த மாட்டேன் – துருவ் ஜுரேல்

இந்திய அணியின் இளம் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேல் கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 459 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 4 டி20 போட்டிகளில் விளையாடி 12 ரன்களை குவித்துள்ளார். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில் பேக்கப் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.

வாய்ப்பு கிடைக்கலனாலும் தொடர்ந்து உழைப்பேன் : துருவ் ஜுரேல்

அதேபோன்று அவ்வப்போது டி20 போட்டிகளுக்குமான இந்திய அணியிலும் பேக்கப் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் பினிஷராகவும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதால் எதிர்கால நட்சத்திர வீரராகவும் பார்க்கப்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணியுடன் பயணித்து வரும் அவருக்கு இதுவரை ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆனாலும் ஒருநாள் போட்டிகளில் இடம் பிடிக்கும் வகையில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரின் முதல் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 108 ரன்கள் சராசரியுடனும், 137 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 324 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்த அவர் மூன்றாவது போட்டியின் போது ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இப்படி விஜய் ஹசாரே தொடரில் அசத்திய அவருக்கு ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருக்கிறது. ஆனாலும் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை கே.எல் ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். அதேபோன்று பேக்கப் கீப்பராக இஷான் கிஷன் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதனால் துருவ் ஜுரேல் இன்னும் தனது ஒருநாள் போட்டிகளுக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தன்னை தேர்வு செய்யவில்லை என்றாலும் கவலை கிடையாது தான் தொடர்ந்து உழைக்க தயார் என துருவ் ஜுரேல் சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் உண்மையிலேயே எந்த ஒரு குறிக்கோளையும் வைத்து செயல்படவில்லை. தற்போதைக்கு என் எண்ணம் முழுவதும் கிரிக்கெட் மீது மட்டும்தான்.

இதையும் படிங்க : நியூசி டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் இதை மட்டும் சரி செஞ்சா.. டி20 வேர்ல்டுகப் நமக்கு தான் – விவரம் இதோ

நான் தொடர்ச்சியாக என்னுடைய விடாமுயற்சியும், கடின உழைப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன். என்னுடைய வேலை நான் முறையாக பயிற்சி செய்வதும் தொடர்ந்து விளையாடுவது மட்டும் தான். எனவே தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் நான் பயிற்சியினை மேற்கொள்கிறேன். தற்போதைக்கு என்னுடைய ப்ராசஸில் மட்டுமே கவனமாக இருக்கிறேன். அதன் பின்னர் அனைத்தும் கைகூடும் என்று தான் நம்புவதாக துருவ் ஜுரேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -