நியூசி டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் இதை மட்டும் சரி செஞ்சா.. டி20 வேர்ல்டுகப் நமக்கு தான் – விவரம் இதோ

Suryakumar Yadav
- Advertisement -

கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியானது இம்முறை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களம் காண்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த டி20 உலக கோப்பை தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரியகுமார் யாதவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு :

எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் சூரியகுமார் யாதவின் தலைமையின் கீழ் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு அதிரடி மாற்றமாக மோசமான பேட்டிங் பார்மில் இருந்த சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக சையத் முஷ்டாக் அலி தொடரில் அசத்திய இஷன் கிஷன் அணிக்குள் வந்துள்ளார். மற்றபடி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது. ஆனாலும் இந்த அணியில் ஒரு மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுவது கேப்டன் சூர்யகுமார் யாதவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தான்.

ஏனெனில் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த அவர் அதன் பின்னர் கடந்த ஓராண்டாகவே ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க தொடர் வரை அவரது இந்த தடுமாற்றம் தொடர்ந்து வந்தது.

- Advertisement -

இப்படி டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் வேளையில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதனை சரிசெய்ய சூரியகுமார் யாதவுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. அதாவது எதிர்வரும் டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் மட்டும் தான் இழந்த பேட்டிங் பார்மை மீட்டெடுத்தால் நிச்சயம் டி20 உலக கோப்பை தொடரிலும் அதே பார்மை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவார். அப்படி அவர் மட்டும் பழைய ரிதத்திற்கு திரும்பினால் டி20 வேர்ல்டுகப் நமக்குத்தான் என்று தெரிகிறது. ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை மிகப்பலம் வாய்ந்த ஒரு வரிசையை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : எல்லா சிக்னலும் சரியா இருக்கு.. இதுதான் தோனிக்கு கடைசி ஐ.பி.எல் சீசன் – ராபின் உத்தப்பா கருத்து

இவ்வேளையில் சூரியகுமார் யாதவ் மட்டும் பழைய பார்முக்கு திரும்பினால் இந்திய அணி அதிரடியான ரன் குவிப்பை வழங்கும். அப்படி சூரியகுமார் யாதவும் தனது பார்மை மீட்டெடுத்து விட்டால் பந்துகள் மைதானத்தின் அனைத்து புறமும் பறக்கப்போவது உறுதி. அதோடு நிச்சயம் டி20 உலக கோப்பையும் நமக்கு தான் என்பதும் உறுதி.

Advertisement