10 – 10 ரன்களாக பிரிச்சு ஆடுனோம்.. 4வது போட்டியில் இங்கிலாந்தை சாய்த்த.. ஆட்டநாயகன் துருவ் ஜுரேல் பேட்டி

Dhruv Jurel 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்த உதவியுடன் 353 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா மிகவும் போராடி 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 90, ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 46 வருடங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து துல்லியமாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 145 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜுரேல்:
அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்களை எடுத்தார். இறுதியில் 192 ரன்களை துரத்திய இந்தியாவை கேப்டன் ரோஹித் சர்மா 55, ஜெய்ஸ்வால் 37, கில் 52*, துருவ் ஜுரேல் 39* ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற வைத்தனர். அதனால் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

அந்த வகையில் முதல் போட்டியில் தோற்றாலும் பின்னர் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முதல் இன்னிங்ஸில் 177/7 என இந்தியா திணறிய போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து 90 ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 39* ரன்கள் அடித்து கருப்பு குதிரையாக செயல்பட்ட துருவ் ஜுரேல் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் கடைசி நேரத்தில் கில்லுடன் சேர்த்து பத்து பத்து ரன்களாக இலக்கை பிரித்து சேசிங் செய்ததாக துருவ் ஜுரேல் கூறியுள்ளார். இப்போட்டியில் தன்னுடைய ஆட்டத்தை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் நான் விளையாடுகிறேன். முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு ரன்கள் தேவைப்பட்டது. எனவே கடைசி வரை பேட்டிங் செய்தால் முக்கிய ரன்களை எடுக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: 8 தொடர்கள்.. இங்கிலாந்தின் பஸ்பாலை பார்சல் கட்டிய இந்தியா.. உலகின் வேறு எந்த அணியும் ருசிக்காத சாதனை வெற்றி

“அதற்காக நான் போட்ட பார்ட்னர்ஷிப்பில் சேர்ந்து பேட்டிங் செய்தவர்களுக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும். பந்தை பார்த்து அடித்த நான் அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் கில்லுடன் நன்றாக பேசி விளையாடினேன். குறிப்பாக நாங்கள் இலக்கை 10 ரன்கள் கொண்ட செட்டாக பிரித்து அதை துரத்துவதற்கான பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம்” என்று கூறினார்.

Advertisement