- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெ.இ அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதிசெய்த ஜுரேல் – என்ன நடந்தது?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஏ அணியானது தற்போது இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வ மற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி லக்னோவில் உள்ள மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியானது போட்டியின் நான்காம் நாளான செப்டம்பர் 19-ஆம் தேதியான இன்றுடன் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அசத்திய துருவ் ஜூரேல் :

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 532 ரன்களை குவித்து டிக்ளேர் செய்திருந்தது. ஆஸ்திரேலிய ஏ அணி சார்பாக மற்றும் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் ஜாஸ் பிலிப்பி ஆகியோர் சதமடித்து அசத்தியிருந்தனர்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 531 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 150 ரன்களையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் 140 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய ஏ அணி தங்களது இரண்டாம் இன்னிங்சை விளையாடிய போது போட்டியின் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வியின்றி இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரேல் 197 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி, 4 சிக்ஸர் என 140 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன்மூலம் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தினை உறுதி செய்துள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் ஏற்கனவே இங்கிலாந்து தொடரின் போது ரிஷப் பண்ட் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் மாற்று வீரராக விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு அடுத்து சர்வதேச டி20 அரங்கில் இந்திய அணி இன்று நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ

இவ்வேளையில் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள வேளையில் அந்த தொடருக்கு முன்னதாக ரிஷப் பண்ட் தயாராக மாட்டார் என்பதால் துருவ் ஜுரேல் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக பிளேயிங் லெவனில் விளையாடுவார். கூடுதல் விக்கெட் கீப்பராக தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -