ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்திய அணி இன்று நிகழ்த்தவிருக்கும் சாதனை :
அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியானது தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபி நகரில் ஓமன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெறப்போவது உறுதி.
இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் இந்திய அணியானது சர்வதேச டி20 அரங்கில் பாகிஸ்தான் அணிக்கு அடுத்து இரண்டாவது சர்வதேச அணியாக மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்த காத்திருக்கிறது. அது குறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணி இன்றைய போட்டியில் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய அணியாக பாகிஸ்தான் அணி 275 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளது.
அவர்களுக்கு அடுத்து தற்போது 249 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியானது இன்று ஓமன் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் போட்டியின் மூலம் 250-வது டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு அடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் 250 ஆட்டங்களில் விளையாடிய இரண்டாவது அணியாக சாதனை நிகழ்த்த காத்திருக்கிறது.
இதையும் படிங்க : விக்கெட் எடுக்கலனா எனக்கு வாய்ப்பு கிடையாது.. இதான் உண்மை.. தனது வாய்ப்பு குறித்து – குல்தீப் யாதவ் வெளிப்படை
கடந்த 2006-ஆம் ஆண்டு வீரேந்திர சேவாக் தலைமையில் முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணி இதுவரை இரு முறை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதோடு 166 வெற்றிகளை பெற்று அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



