- Advertisement -
ஐ.பி.எல்

பெங்களூரு வீரர்களுக்கு கைகொடுக்காமலே தோனி ஓய்வறைக்கு செல்ல என்ன காரணம்? – விவரம் இதோ

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்னர் நடைபெற்று முடிந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் ஆட்டமிழந்த தோனி பெங்களூரு அணியின் வீரர்களுக்கு போட்டி முடிந்த பின்னர் கை கொடுக்க சிஎஸ்கே அணி வீரர்களுடன் முதல் நபராக காத்திருந்தார். ஆனால் போட்டி முடிந்தும் பல நிமிடங்களாக பெங்களூரு அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

அதன் காரணமாக சிஎஸ்கே வீரர்கள் பவுண்டரி லைனின் அருகே ஆர்.சி.பி வீரர்களுக்கு கை கொடுக்க மேலும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த தோனி உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறி ஆர்.சி.பி அணியின் நிர்வாக ஊழியர்களிடம் கை கொடுத்து விட்டு ஓய்வுவறைக்கும் சென்றார்.

பின்னர் மேலும் சில நிமிடங்கள் கழித்து இரு அணி வீரர்களும் கை கொடுத்தபடி மைதானத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் தோனி மட்டும் மைதானத்தில் காத்திருக்காமல் வெளியேறியது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கு காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே முழங்கால் வலியில் இருந்து வரும் தோனி ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் அந்த வலிக்கான முதலுதவியை எடுத்து வருகிறாராம். அதனாலே பெங்களூரு போட்டி முடிந்த பின்னரும் மைதானத்தில் காத்திருந்த அவர் முழங்கால் வலி காரணமாகவே ஓய்வறைக்கு சென்று முதலிரவு எடுத்துக் கொண்டாராம்.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணிக்கெதிராக நாங்க தோத்து இருந்தாலும் இந்த விஷயம் ஹேப்பி தான் – ஜிதேஷ் சர்மா பேட்டி

அதன் காரணமாகவே பெங்களூரு அணி வீரர்களிடம் கைகொடுக்க காத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு தோனி ஓய்வறைக்கு சென்றுவிட்டார் என்பதை அறிந்த விராட் கோலி நேரடியாக அங்கு சென்று அவரிடம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -