ராஜ்வர்தன் ஹங்கரேக்கருக்கு ஏன் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கல – டாஸிற்கு பிறகு பதிலளித்த தோனி

Hangargekar
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமான சறுக்கலை சந்தித்துள்ளது. அதற்கு காரணம் அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம், கேப்டன்சி மாற்றம் மற்றும் அனுபவமற்ற பவுலர்கள் என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எது எப்படி இருப்பினும் இந்த தொடரில் ஒன்பதாவது இடத்தை பிடித்து சென்னை அணி பெரிய ஏமாற்றத்துடன் வெளியேறுகிறது. இதனால் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் லீக் போட்டிகளின் முடிவிலேயே இரண்டாவது முறையாக வெளியேறுகிறது.

CSK MS Dhoni Ravindra Jadeja

ஐபிஎல் வரலாற்றில் எப்பொழுதும் பெரிய அணியாக பார்க்கப்படும் சென்னை அணிக்கு ஏற்பட்ட இந்த சரிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று சென்னை அணி தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியிலாவது சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தோனி இன்றைய போட்டிக்கான அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஷிவம் துபேவிற்கு பதிலாக ராயுடுவை அணிக்குள் கொண்டு வந்தார். அதை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

hangargekar 2

இந்நிலையில் டாசிற்குப் பிறகு வர்ணனையாளர் இளம் வீரரான ராஜ்வர்தன் ஹங்கரேக்கருக்கு ஏன் இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று டோனியிடம் கேள்வி எழுப்பினார். இது குறித்து பதில் அளித்த தோனி கூறுகையில் : ஹங்கரேக்கர் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை வைத்துள்ளார். ஆனாலும் அவர் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். நாங்கள் எங்கள் அணியின் இளம் வீரர்களை இன்னும் முன்னேற்றம் அடையச் செய்து வாய்ப்புகளை வழங்கினால் மட்டுமே அது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

- Advertisement -

ஹங்கரேக்கர் தற்போது அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். சரியான பயிற்சி மற்றும் அதிக அளவு உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் தரத்தில் பந்து வீசவைப்பது சரியானது கிடையாது. எனவே அவருக்கு நல்ல பயிற்சியும் அனுபவம் கிடைக்க விரும்புகிறோம். அதன் காரணமாகவே அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க : கையில் கிடைத்தும் வாய்க்கு கிடைக்காத கொல்கத்தாவின் வெற்றி – தோல்விக்கான காரணத்தை பற்றிய அலசல்

அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரில் அசத்தலாக பந்துவீசிய ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் நல்ல வேகப்பந்துவீச்சாளர் என்பதோடு மட்டுமின்றி இறுதி கட்டத்தில் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வர இந்த தொடர் முழுவதுமே அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement