கையில் கிடைத்தும் வாய்க்கு கிடைக்காத கொல்கத்தாவின் வெற்றி – தோல்விக்கான காரணத்தை பற்றிய அலசல்

KKR vs SRH Tim Southee
- Advertisement -

ஐபிஎல் 2021 தொடரில் இங்கிலாந்துக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்த இயன் மோர்கன் தங்களுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அதற்கு முந்தைய சீசனில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பாதியிலேயே கழற்றிவிட்ட கொல்கத்தா அணி நிர்வாகம் மோர்கனை புதிய கேப்டனாக நியமித்தது. அதில் இந்தியாவில் நடைபெற்ற முதல் பகுதியில் சொதப்பிய அந்த அணி துபாயில் நடைபெற்ற 2-வது பகுதியில் வெங்கடேஷ் ஐயர் எழுச்சியால் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. இருப்பினும் அதில் இயன் மோர்கன் கணிசமான ரன்களைக் கூட தவறியதால் 2022இல் அவரையும் கழட்டிவிட்ட அந்த அணி நிர்வாகம் புதிய கேப்டனை ஏலத்தில் தேர்வு செய்ய முடிவெடுத்தது.

KKR

- Advertisement -

குறிப்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லியை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக இறுதிப் போட்டிக்கு (2020இல்) அழைத்துச் சென்ற இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யரை வாங்குவதற்கு அந்த அணி நினைத்தது. பெங்களூர், பஞ்சாப் ஆகிய அணிகளும் தங்களுக்கு கேப்டன் இல்லாததால் அவரை வாங்க போட்டியிட்ட நிலையில் 12.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வெற்றிகரமாக வாங்கிய கொல்கத்தா தங்களின் கேப்டனாக நியமித்தது.

கையில் கிடைத்தும்:
அதனால் 2021இல் கோட்டைவிட்ட சாம்பியன் பட்டத்தை இம்முறை வென்ற விடலாம் என்று கொல்கத்தா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அந்த அணி முதல் வாரத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பொதுவாகவே ஒரு அணி வெற்றி பெற்றால் பெஞ்சில் தரமான வீரர்கள் அமர்ந்திருந்தாலும் கூட வெற்றிக் கூட்டணியை மாற்றக்கூடாது என்ற நோக்கத்திலேயே வெற்றி நடையை தொடர்வார்கள். ஆனால் ஆரம்பத்தில் கிடைத்த ஒருசில வெற்றிகளுக்குப் பின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறிகிறோம் என்ற பெயரில் அந்த அணி தேவையற்ற மாற்றங்களை செய்யத் தொடங்கியது.

KKR Shreyas Iyer

மேலும் எந்த வீரரும் அனைத்து நாட்களும் சிறப்பாக செயல்பட முடியாது என்ற நிலைமையில் ஒருசில போட்டிகளில் சொதப்பினார்கள் என்பதற்காக பட் கம்மின்ஸ் போன்ற தரமான வீரர்களையும் பெஞ்சில் அமர வைத்து பின்னர் சேர்த்து பின்னர் அமரவைத்து என பல குளறுபடிகளை செய்தது. அதற்கு பலனாக அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பும் 99% பறிபோனது. அதனால் முதலில் கிடைத்த வெற்றி கூட்டணியை மீண்டும் ஒன்று சேர முயற்சித்த போதும் அந்த அணியால் தொடர் வெற்றிகளுக்கு திரும்ப முடியவில்லை.

- Advertisement -

தேவையற்ற மாற்றம்:
1. அதற்கான எடுத்துக்காட்டாக முதல் 5 போட்டிகளில் அஜிங்க்ய ரகானே – வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். அதில் 5இல் 3 வெற்றிகளை கொல்கத்தா பெற்ற போதிலும் ரகானே பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை என்பதற்காக தேவையின்றி 6-வது போட்டியில் வெங்கடேஷ் ஐயர் – ஆரோன் பின்ச் ஜோடியை அந்த அணி நிர்வாகம் களமிறங்கியது.

DC vs KKR Shreyas Iyer Rishabh Pant

2. அதன்பின் பின்ச் – சுனில் நரேன், சாம் பில்லிங்ஸ் – சுனில் நரேன், பின்ச் – வெங்கடேஷ் ஐயர், இந்திரஜித் – பின்ச், வெங்கடேஷ் ஐயர் – ரகானே, வெங்கடேஷ் ஐயர் – அபிஹித் தோமர் என கடைசி 8 போட்டிகளில் 6 புது புது வித்தியாசமான ஓபனிங் ஜோடிகளை அந்த அணி நிர்வாகம் களமிறக்கி மிகப்பெரிய தவறு செய்தது.

- Advertisement -

3. மேற்குறிப்பிட்ட ஜோடிகளை மாற்றும் போதெல்லாம் ஒன்று சுனில் நரேன் மிடில் ஆர்டரில் வருவார், இல்லையேல் டாப் ஆர்டரில் வருவார் என்பதால் இந்த சீசன் முழுவதும் அந்த அணியின் பேட்டிங் வரிசையை ஒரு நிலையற்றதாக மாறி தோல்வியை கொடுத்தது.

Venky

4. அதேபோல் கோடிக்கணக்கில் தக்கவைத்த வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி போன்றவர்கள் ஒருசில போட்டிகளில் சொதப்பினார்கள் என்பதற்காக பெஞ்சில் அமர வைத்த அந்த அணி நிர்வாகம் அவர்களுக்கு பதில் வாய்ப்பளித்த வீரர்களும் சொதப்பியதால் மீண்டும் கடைசி 2 – 3 போட்டிகளில் வாய்ப்பளித்தது.

- Advertisement -

5. மொத்தத்தில் கொல்கத்தா அணியில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன் ஆகிய மூவரைத் தவிர யாருக்குமே நிலையான இடமில்லை என்ற சூழ்நிலை தான் இந்த சீசனில் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

Sunil Narine KKR

6. ஏனெனில் எந்த ஒரு வீரருமே அணியில் தனது இடம் பாதுகாப்பாக இல்லை என்று கருதினால் இந்த போட்டியில் எப்படியாவது சிறப்பாக செயல்பட்ட தீர வேண்டும் என்ற மன நிலைமையில் பதற்றத்தில் சொதப்பி விடுவார்கள். அது போன்ற ஒரு சூழ்நிலை தான் கொல்கத்தாவிற்கு தோல்வியை பரிசளித்தது.

சிஇஓ தலையீடு:
மேலும் கேப்டனாக இருந்தும் வீரர்களை தேர்வு செய்வதில் தாம் ஒரு பொம்மைபோல இருப்பதாகவும் சிஇஓ வெங்கி மைசூர் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தான் கொல்கத்தா அணி வீரர்களை தேர்வு செய்வதாக ஒரு போட்டியின் முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் உண்மையை போட்டு உடைத்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் களமிறங்கி விளையாடும் கேப்டனுக்கு தான் தமக்கு எந்த வீரர்கள் தேவை, யாரை பயன்படுத்தினால் வெற்றி பெறலாம் என்று புரியும்.

இதையும் படிங்க : கேப்டனா இல்லாமல் போனாலும் இந்தியாவுக்காக இதை செய்வதே எனது லட்சியம் – நட்சத்திர வீரர் பேச்சு

அந்த நிலைமையில் கேப்டனை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்காத வெங்கி மைசூர், மெக்கலம் போன்றவர்களை மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்கள். எனவே அடுத்த வருடமாவது ஒரு கேப்டன் மீது நம்பிக்கை வைத்து வீரர்களின் தேர்வில் தலையீடு செய்யாமல் இருந்தால் மட்டுமே கொல்கத்தா 3-வது கோப்பையை வெல்ல முடியும் என்பதை அந்த அணி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisement