தனது முதல் தமிழ் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் தோனி பேசியது என்ன? – அரங்கை அசரவைத்த தோனியின் பேச்சு

Dhoni-and-Sakshi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. இந்த தொடரானது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரசிகர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு சீசனில் விளையாட இருப்பதை தோனி உறுதி செய்தார்.

Dhoni

- Advertisement -

அதன் பின்னர் தனது முழங்காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கான சிகிச்சைக்காக மும்பை சென்ற தோனி அங்கு அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் நேற்று தனது மனைவியுடன் சென்னைக்கு வந்திருந்தார். விமான நிலையத்திலேயே தோனிக்கு தடபுடலான வரவேற்பினை ரசிகர்கள் வழங்கி இருந்தனர் அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

அப்படி தோனி சென்னை வர காரணம் யாதெனில் : தோனி என்டர்டைன்மென்ட் என்கிற நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் முறையாக தமிழ் திரைப்படத்தை தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவே அவர்கள் இருவரும் சென்னை வந்ததாக தெரிந்தது.

LGM

தோனி என்டர்டைன்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு, நதியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : எனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் நான் பங்கேற்றது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது முதல் இரட்டை சதம் மட்டுமின்றி அதிக ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். இப்போது எனது முதல் பட தயாரிப்பும் தமிழ் மொழியில் தான் அமைந்துள்ளது.

இதையும் படிங்க : சாய் சுதர்சன், தவானுக்கு இடமில்லை – 2023 ஆசிய கேம்ஸ் தொடருக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா

சென்னைக்கும் எனக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் இறுக்கமான ஒன்று. சென்னை எப்பொழுதுமே எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் நீண்ட நாட்களுக்கு முன்பே சென்னையால் தத்தெடுக்கப்பட்டு விட்டேன் என தோனி அசத்தலான பேச்சை வெளிப்படுத்தினார். அவரது இந்த பேச்சு அரங்கில் இருந்த அனைவரையும் அசர வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement