சாய் சுதர்சன், தவானுக்கு இடமில்லை – 2023 ஆசிய கேம்ஸ் தொடருக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா

- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த போராட உள்ளது. இதற்கிடையே வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் சீனாவில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால் அந்த சமயத்தில் உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராகி புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டிய நிலைமைக்கு ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி தள்ளப்பட்டுள்ளது.

Dhawan-IND-Team

- Advertisement -

அதனால் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்படும் சிகர் தவானை கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் இதற்கு முன் இந்தியாவின் வெற்றிகளில் ஆற்றிய பங்கிற்காக இத்தொடரில் கேப்டனாக அறிவிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் டி20 போட்டிகளாக நடைபெறப்போகும் அந்த தொடரில் உலகக்கோப்பையில் விளையாடாத நிறைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தேர்வாகாத ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா போன்றவர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

சுதர்சனுக்கு இடமில்லை:
மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரிலும் அசத்திய இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் கடந்த சிகர் தவானுக்கு பதில் உலக கோப்பையில் இடம் பெற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ருதுராஜ் கைக்வாட் – யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாட தகுதியானவர்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

TNPL 2023 Sai Sudarsan

அத்துடன் ஓப்பனிங் வீரராக விளையாடிய சாய் சுதர்சன் திறமையானவர் என்றாலும் அவரை விட மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா மிடில் ஆர்டரில் அசத்தும் தன்மை கொண்டவர் என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அத்தொடருக்கான அணியை நான் ருதுராஜ் வைத்து துவங்குகிறேன். குறிப்பாக ரோகித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிசான் ஆகியோர் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்படுவார் என்பதால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காது என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

“மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி ஆகியோரும் உலகக்கோப்பையில் விளையாடுவார்கள் என்பதால் அவருக்கான இடம் இன்னும் திறக்கவில்லை என்று நினைக்கிறேன். எனவே சமீப காலங்களில் நிறைய வாய்ப்புகளை பெறாத ருதுராஜை ஓப்பனிங் வீரராக நான் தேர்வு செய்கிறேன். அவருடன் களமிறங்கும் 2வது வீரராக நான் ஜெயிஸ்வாலை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் இப்போது தான் கேரியரை துவங்கியுள்ள அவருக்கு கடந்த 2 – 3 வருடங்களில் ஒருநாள் அணியில் நெருங்கும் அளவுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை”

Aakash-Chopra

“அதே போல் 3வது இடத்தில் நான் திலக் வர்மாவை தேர்ந்தெடுப்பேன். அந்த இடத்தில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் பொருத்தமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் நான் திலக் வர்மாவை தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கக் கூடியவராக செயல்பட்டு வருகிறார். அத்துடன் அவர் அவ்வப்போது பந்து வீசும் திறமையும் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து 4வது இடத்தில் நித்திஷ் ராணா இருப்பார்”

இதையும் படிங்க:ரோஹித்துக்கு பதில் அவரையே கேப்டனாக போடுங்க – பிசிசிஐக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கோரிக்கை

“ஏனெனில் ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது அவர் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அசத்தி வருகிறார். அவரைத் தொடர்ந்து நிச்சயமாக ரிங்கு சிங் விளையாடுவதற்கு தகுதியுடையவர். அடுத்த இடத்தில் ஜித்தேஷ் சர்மா இருப்பார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் அவர் விக்கெட் கீப்பராக உங்களுக்கு அணிக்கு தேவைப்படுகிறார். அதைத்தொடர்ந்து 7வது இடத்தில் போட்டியை மாற்றக்கூடிய சிவம் துபேவை நீங்கள் தேர்ந்தெடுத்தால் தேவைப்படும் போது முன்கூட்டியே பேட்டிங் செய்யவும் அனுப்பலாம்” என்று கூறினார்.

Advertisement