ரோஹித்துக்கு பதில் அவரையே கேப்டனாக போடுங்க – பிசிசிஐக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கோரிக்கை

Prasad
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது. அதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதற்கு நிறைய ரசிகர்களிடையே அதிருப்தி காணப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்து பேட்டிங்கிலும் சொதப்பி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

Rohit-Sharma

- Advertisement -

முன்னதாக 2014இல் தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிய இந்தியாவை கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவு கொடுத்து 2016 – 2021 வரை தன்னுடைய ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் உலகக் கோப்பைகளை வென்று கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய அவருக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார்.

ரோஹித்துக்கு பதில்:
ஆனால் பொறுப்பேற்றது முதல் அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுத்த அவர் இங்கிலாந்து மற்றும் வங்கதேச தொடர்களில் பங்கேற்காத நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழி நடத்தி சுமாராக கேப்டன்ஷிப் செய்தார். அதனால் ஏற்கனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்குவதைப் போல வருங்காலத்தை கருத்தில் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித்துக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Rohit-and-Kohli

இந்நிலையில் கம்பேக் கொடுத்த ரகானே துணை கேப்டனாக அறிவிக்கப்படும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்த விராட் கோலி மீண்டும் ஏன் இந்தியாவை வழி நடத்தக் கூடாது என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வித்தியாசமான கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது ஏன் விராட் கோலியாக இருக்கக் கூடாது? குறிப்பாக ரகானே கம்பேக் கொடுத்து துணைக் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிலையில் விராட் கோலி ஏன் மீண்டும் அந்த பதவிக்கு வரக்கூடாது? இருப்பினும் தற்போது நிலைமையில் கேப்டன்ஷிப் பற்றி அவருடைய மனநிலை என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது”

- Advertisement -

“ஆனால் ரோகித் சர்மாவை தாண்டி செல்ல விரும்பும் தேர்வு குழுவினர் இதைப் பற்றி நினைப்பார்களா என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை நீங்கள் ரோகித் சர்மாவை தாண்டி அனுபவமிக்க ஒருவரை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு விராட் கோலி சிறந்தவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தொடர விரும்பிய விராட் கோலி ஒருநாள் கேப்டன்ஷிப் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட விரக்தியில் பணிச்சுமையை காரணமாக காட்டி மொத்தமாக பதவி விலகினார்.

Prasad

மேலும் கடந்த காலங்களில் இங்கிலாந்துக்கு எதிராக ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கடைசி நேரத்தில் விலகிய போது பும்ரா தற்காலிகமாக செயல்பட்டார். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் கேப்டனாக திரும்பாத விராட் கோலி மீண்டும் அந்த பதவியில் செயல்படுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சி அசத்தும் ரிஷப் பண்ட் அந்தப் பதவிக்கு தகுதியானவரா என்ற கேள்விக்கு அவர் மேலும் பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க:தயவு செஞ்சு உலகிலேயே ஃபிட்டான டீமுன்னு பெருமை பேசாதீங்க – இந்திய சீனியர்களை விளாசிய கவாஸ்கர், காரணம் என்ன

“முதலில் அவர் கம்பேக் கொடுக்க வேண்டும். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இதர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை செய்யாத சாதனைகளை ரிஷப் பண்ட் செய்துள்ளார். ஏனெனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் சதம் அடித்ததில்லை. எனவே மீண்டும் கம்பேக் கொடுத்து சிறப்பாக விளையாடினால் அவர் சிறந்த தேர்வாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement