தயவு செஞ்சு உலகிலேயே ஃபிட்டான டீமுன்னு பெருமை பேசாதீங்க – இந்திய சீனியர்களை விளாசிய கவாஸ்கர், காரணம் என்ன

Gavaskar
- Advertisement -

சர்வதேச அளவில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியா சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மிரட்டலாக செயல்பட்டாலும் ஐசிசி தொடர்களில் முக்கிய போட்டிகளில் சொதப்பி கடந்த 10 வருடங்களாக வெறும் கையுடன் வெளியேறி வருவதற்கான காரணம் யாருக்குமே புரியாத புதிராக இருந்து வருகிறது. அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பி கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்ட ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பையும் இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதை விட ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஃபைனலில் முழுமையாக தயாராகாமல் 10 நாட்கள் முன்பாக பயணித்துக் களமிறங்கியது தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்தது. அதனால் முழுமையாக தயாராவதற்கு தங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்த ரோகித் சர்மா ஐபிஎல் தொடரை தள்ளி வையுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக வரும் காலங்களில் 3 போட்டிகள் கொண்ட ஃபைனலை நடத்துமாறு கேட்டது அனைவருக்கும் வியப்பாக அமைந்தது.

கவாஸ்கர் சாடல்:
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பாடத்தை கற்ற இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 20 – 25 நாட்கள் இடைவெளி இருந்தும் ஒரு பயிற்சி போட்டியில் கூட விளையாடாமல் ஜூலை 12இல் துவங்கும் டெஸ்ட் தொடரில் நேரடியாக களமிறங்க உள்ளது ஏன் என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் யோ-யோ டெஸ்ட்டை கடைப்பிடித்து உலகிலேயே ஃபிட்டாக இருக்கிறோம் என்று சொல்லும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் முக்கிய தொடர்களில் காயமடைவதும் அடிக்கடி பணிச்சுமையை காரணம் காட்டி ஓய்வெடுப்பதும் ஏன் என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Rohit-and-Kohli

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தயாராவது பற்றி நாம் எதை பேசுகிறோம்? தற்போது இந்திய அணியினர் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக உங்களிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இருக்கிறது. அந்த பாடத்தை வைத்து நீங்கள் ஏதாவது பயிற்சி போட்டியில் விளையாடுகிறீர்களா? இல்லையெனில் அந்த 20 – 25 நாட்கள் பயிற்சிக்கு தேவை என்பதை பற்றி ஏன் பேசுகிறார்கள்? எனவே தயாராவது பற்றி முதலில் நியாயமாக பேசுங்கள். ஒவ்வொரு தொடருக்கும் 15 நாட்கள் முன்பாக சென்று 2 பயிற்சி போட்டிகளில் விளையாடுங்கள்”

- Advertisement -

“அதில் வேண்டுமானால் உங்களுடைய முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து தற்சமயத்தில் தடுமாறும் வீரர்களை விளையாட வையுங்கள். மேலும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு பயிற்சி போட்டியில் வாய்ப்பை கொடுங்கள். ஆனால் இங்கே முதன்மையான வீரர்கள் (ரோஹித், விராட்) முன்கூட்டியே சென்று பயிற்சிகளை எடுக்க விரும்புவதில்லை என்பதே உண்மையாகும். ஏனெனில் என்ன நடந்தாலும் நான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் பணிச்சுமையை பற்றி பேசுவார்கள்”

“குறிப்பாக உலகிலேயே ஃபிட்டான அணி என்று உங்களை நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனாலும் ஒரு சில போட்டிகளில் விளையாடியதும் நீங்கள் ஏன் பணிச்சுமையால் பாதிக்கப்படுகிறீர்கள். குறிப்பாக குறைந்த நேரத்தில் முடியக்கூடிய டி20 போட்டிகளில் மட்டுமே அதிகமாக விளையாடும் உங்களுக்கு எப்படி பணிச்சுமை ஏற்படுகிறது” என்று கூறினார். அதாவது ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் பெரும்பாலான முக்கியமற்ற தொடர்களில் ஓய்வெடுத்து முக்கியமான போட்டிகளில் மட்டுமே களமிறங்குகின்றனர்.

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித்துடன் துவக்க வீரராக – களமிறங்கப்போவது இவர்தான்

இருப்பினும் கடைசியில் சுமாராக செயல்பட்ட பின் அதற்கு பணிச்சுமை தான் காரணம் என்று அவருக்கு ஆதரவாக பலரும் பேசுகின்றனர். ஆனால் ஃபிட்டாக இருக்கிறோம் என்று சொல்லும் நட்சத்திர வீரர்கள் பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுக்காத போதிலும் அடிக்கடி பணிச்சுமையை காரணமாக காட்டி ஓய்வு பெறுவதாக கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Advertisement