IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித்துடன் துவக்க வீரராக – களமிறங்கப்போவது இவர்தான்

Rohit-Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது டோமினிக்கா நகரில் நாளை மறுதினம் ஜூலை 12-ஆம் தேதி துவங்க உள்ளது.

IND-vs-WI

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பே அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை அடைந்ததை அடுத்து இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நகர துவங்கியுள்ளது.

இதன் காரணமாக சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டதோடு முகமது ஷமிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சில இளம் வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும் சில வீரர்களுக்கு இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கவும் ஒரு வாய்ப்பும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் புஜாராவின் இடத்திற்கு மாற்றாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

Yashasvi Jaiswal

இருந்தாலும் புஜாராவின் இடத்தில் இறங்கப்போவது யார்? அதோடு கூடுதலாக ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவுடன் முதலாவது டெஸ்ட் போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலே ஓப்பனராக களமிறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. ஏனெனில் எப்போதுமே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலது கை, இடது கை ஆட்டக்காரர்கள் துவக்க வீரர்களாக இறங்குவதில் ஆர்வம் காட்டுவார் என்பதனால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இப்போல்லாம் இந்தியா எங்களோட விளையாட பயப்பட காரணம் அது தான் – 1998 பின்னணியை பகிர்ந்த அப்துல் ரசாக்

அதோடு அண்மையில் நடைபெற்று முடிந்த பயிற்சி போட்டியில் கூட ரோகித் சர்மா மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோரே துவக்க வீரர்களா அந்த பயிற்சி போட்டியில் களமிறங்கினர். அந்த பயிற்சி ஆட்டத்தில் 76 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 54 ரன்கள் எடுத்து அசத்தியதால் நிச்சயம் ரோகித் சர்மாவுடன் ஜெயிஸ்வால்தான் துவக்க வீரராக களமிறங்குவார் என்றும் புஜாராவின் இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்றும் தெரிகிறது.

Advertisement