இப்போல்லாம் இந்தியா எங்களோட விளையாட பயப்பட காரணம் அது தான் – 1998 பின்னணியை பகிர்ந்த அப்துல் ரசாக்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக 1992 முதல் உலகக் கோப்பைகளில் சந்தித்த 7 போட்டிகளில் வென்றதைப் போல இம்முறையும் அக்டோபர் 15ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக வென்று இதுவரை காத்து வரும் கௌரவத்தை இந்தியா தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

- Advertisement -

முன்னதாக ஒரு காலத்தில் அடிக்கடி மோதுவதை வழக்கமாக வைத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு நாடுகளுக்குமிடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை நிறுத்தி விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பங்கேற்காது என்று தெரிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார்.

தோல்வி பயம்:
அதற்கு எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இருப்பினும் இறுதியாக பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளை அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் எஞ்சிய போட்டிகளை இலங்கையிலும் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் 2021 டி20 உலக கோப்பை போல பாகிஸ்தான் மக்களுக்கு முன் தோல்வியை சந்தித்து விடுவோம் என்ற பயத்தாலேயே தங்கள் நாட்டுக்கு விளையாட இந்தியா வருவதற்கு மறுப்பு தெரிவிப்பதாக முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

shoaib akhtar sachin tendulkar

அதை விட 1997 – 1998 காலகட்டங்களில் இருதரப்பு தொடர்களில் அதிகமாக தோல்வியை சந்தித்ததாலேயே பாதுகாப்பு பிரச்சினைகளை காரணமாக காட்டி தற்போது அது போன்ற தொடர்களில் இந்தியா தங்களுடன் மோதுவதை மொத்தமாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எப்போதும் பரஸ்பர மரியாதையும் நட்பையும் பகிர்ந்து கொள்கிறோம். இருப்பினும் இந்தியா மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது”

- Advertisement -

“குறிப்பாக 1997 – 1998 காலகட்டத்திற்கு பின் அவர்கள் எங்களுக்கு எதிராக விளையாட விரும்பவில்லை. ஏனெனில் நாங்கள் அந்தளவுக்கு சிறந்த அணியாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியா அதிக தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் தற்போது 2023இல் காலங்கள் மாறிவிட்டதால் நாமும் சிந்தனைகளை மாற்ற வேண்டும். இப்போதெல்லாம் எந்த அணியும் பெரியது சிறிது என்ற வேறுபாடு கிடையாது. மாறாக போட்டி நாளில் யார் அசத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்”

Razzaq

“எனவே 2 அணிகளும் சிறப்பாகவே இருக்கிறது என்பதால் பாகிஸ்தான் பலவீனமாக இருப்பதாக உங்களால் சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாக தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரை பாருங்கள். அதில் எது சிறந்த அணி என்று உங்களால் சொல்ல முடியுமா? இறுதியாக எந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறதோ அதுவே சிறந்தது என்பதே அதற்கான எளிமையான விடையாகும். எனவே எந்த காரணங்களாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு இரு நாடுகளும் மீண்டும் இருதரப்பு தொடர்களில் விளையாட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அஷ்வின் அப்டி சொன்னதுல என்ன தப்பு, நியாயமா ரோஹித்தை கேள்வி கேட்ருக்கணும் – கவாஸ்கர் அதிரடி விமர்சனம்

அவர் கூறுவது போல 90களில் சச்சின் அடித்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலைமையால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிக தோல்விகளை சந்தித்தது. அதனாலேயே இப்போதும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதிய புள்ளி விவரங்களை எடுத்தால் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும் 21ஆம் நூற்றாண்டில் பலமான அணியாக உருவெடுத்த இந்தியா கடந்த 15 – 20 வருடங்களில் பாகிஸ்தானை அதிக முறை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement