தோனி கூடவே வரமாட்டார், உங்களை நீங்களே தான் காப்பாத்திகனும் – இளம்வீரரை எச்சரித்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

LS
- Advertisement -

ஆகஸ்ட் 18-ஆம் தேதியான நேற்று ஜிம்பாப்வேக்கு எதிராக துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 40.3 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35, ங்கரவா 34, எவன்ஸ் 33* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Shikhar-Dhawan

அதை தொடர்ந்து 190 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுமாராக செயல்பட்ட ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து நொறுக்கிய தொடக்க வீரர் ஷிகர் தவான் 9 பவுண்டரியுடன் 81* (113) ரன்களும் சுப்மன் கில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 82* (72) ரன்களும் குவித்து 30.5 ஓவரில் 192/0 ரன்களை எடுக்க வைத்து வெற்றிபெற வைத்தனர். இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய தீபக் சாஹர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இந்தியா தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

தோனியின் குல்தீப்:
முன்னதாக இப்போட்டியில் பந்து வீசிய அனைத்து இந்திய பவுலர்களும் குறைந்தது 1 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மட்டும் 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 3.60 என்ற நல்ல எக்கனாமியில் பந்து வீசினாலும் விக்கெட் எடுக்கவில்லை. உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியத்தால் கடந்த 2017இல் அறிமுகமான இவர் தனது அபார திறமையால் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

kuldeep1

ஆனால் 2019 உலகக்கோப்பைக்கு பின் பார்மை இழந்த அவர் பேட்ஸ்மேன்களிடம் சரமாரியாக அடி வாங்கினார். முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதே அதற்கு முக்கிய காரணமாகும். ஏனெனில் பெரும்பாலும் பவுலர்கள் தடுமாறினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் தோனி இவருக்கும் இவரின் ஜோடியான சஹாலுக்கும் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் போதெல்லாம் அருகே சென்று எப்படி பந்து வீச வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கி 2017 – 2019 வரையிலான காலகட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு மூளையாக திகழ்ந்தார்.

- Advertisement -

கூடவே இருக்கமாட்டார்:
ஆனால் தோனி ஓய்வு பெற்றதும் அது போன்ற ஆலோசனை வழங்குபவர்கள் இல்லாத காரணத்தாலேயே தாம் தடுமாறியதாக அவரே சில பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த நிலையில் அவரை வளர்த்த கொல்கத்தா அணி நிர்வாகமும் கழற்றி விட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் டெல்லிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு 14 போட்டிகளில் 3 ஆட்டநாயகன் விருது உட்பட 21 விக்கெட்டுகளை எடுத்து பார்முக்கு திரும்பி குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் முதல் போட்டிக்கு முன்பாக காயத்தால் வெளியேறிய அவர் இந்த ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

Kuldeep Yadhav vs KKR

இருப்பினும் விக்கெட் எடுக்க தவறிய அவர் காலத்திற்கும் தோனி கூடவே இருக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் விக்கெட்டுகளை எடுத்தால்தான் தொடர்ச்சியான வாய்ப்பை பெற முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி சோனி தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனியை போன்ற மிகச்சிறந்த கீப்பர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். ஒரு பேட்ஸ்மேன் பின்னங்காலில் விளையாடினால் கீப்பர் தன்னுடைய பவுலரை ஃபுல்லாக பந்துவீச சொல்ல வேண்டும். குல்தீப் தனது பந்தை காற்றில் மெதுவாக விடும்போது பேட்ஸ்மேன்கள் பின்னங்காலில் விளையாட முயற்சிக்கின்றனர்”

- Advertisement -

“எனவே அவர் பேட்ஸ்மேன்களை கவர் டிரைவ் அடிப்பதற்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் பந்து மெதுவாக வரும்போது கவர் டிரைவ் அடிப்பது எளிதல்ல. ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் மனதை படித்து அதை அவரிடம் சொல்ல வேண்டும். அந்த வகையில் களத்தில் தோனி போட்டியை மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனின் மனதையும் நன்கு படிப்பார். அவர் நிறைய தருணங்களில் குல்தீப் மற்றும் சஹால் ஆகியோருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்”

இதையும் படிங்க : IND vs ZIM : அக்கறையில்லாதவர், கேப்டன்ஷிப்புக்கு செட்டாக மாட்டார் – கேஎல் ராகுலை விளாசும் ரசிகர்கள், நடந்தது இதோ

“இருப்பினும் தற்போது அவர் இல்லாத நிலையில் கம்பேக் கொடுத்துள்ள குல்தீப் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். இந்த 3 போட்டிகளிலும் விளையாட விரும்பும் அவர் விக்கெட்டுக்களை எடுக்காமல் நேர்த்தியாக மட்டுமே பந்து வீசுகிறார். ஆனால் நல்ல லைனில் தொடர்ச்சியாக கூக்லி அல்லது லெக் பிரேக் ஆகியவற்றில் எதை வீசி பேட்ஸ்மேனுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம் என்பதில் அவர் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement