IND vs ZIM : அக்கறையில்லாதவர், கேப்டன்ஷிப்புக்கு செட்டாக மாட்டார் – கேஎல் ராகுலை விளாசும் ரசிகர்கள், நடந்தது இதோ

KL Rahul IND Deepak Chahar
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 18-ஆம் தேதியான நேற்று துவங்கியது. தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற முதல் போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. இன்னசென்ட் கயா 4, சிகந்தர் ராசா 12 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35 ரன்களும், ங்கரவா 34 ரன்களும், எவன்ஸ் 33* ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீபக் சஹர், அக்சர் பட்டேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 190 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் ஜிம்பாப்வேவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஷிகர் தவான் 9 பவுண்டரியுடன் 81* (113) ரன்களும் சுப்மன் கில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 82* (72) ரன்கள் எடுத்தனர். அதனால் 30.5 ஓவர்களிலேயே 192/0 ரன்களை எடுத்த இந்தியா அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

கலக்கிய சஹால்:
முன்னதாக இப்போட்டியில் சுமார் 6 மாதங்கள் கழித்து காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பிய தீபக் சஹர் அட்டகாசமாக பந்துவீசி ஜிம்பாப்வேவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில் 25 ரன்கள் ஓப்பனிங் பர்ட்னர்ஷிப் அமைத்த அந்த அணிக்கு 7, 9, 11 ஆகிய தன்னுடைய அடுத்தடுத்த ஓவர்களில் வரிசையாக 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஜிம்பாப்வேயின் டாப் ஆர்டரை காலி செய்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். பொதுவாகவே பவர்ப்ளே ஓவரில் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுக்கள் எடுப்பதில் கில்லாடியான அவர் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார்.

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் சென்னைக்காக 14 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போது கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை பரிசளித்தது. அதனால் டி20 உலகக் கோப்பையில் விளையாடப்போகும் ஒரு பவுலராக கருதப்பட்ட இவர் அந்த காயத்தால் மீண்டும் முதலிருந்து துவங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அக்கறையில்லாத ராகுல்:
இருப்பினும் 6 மாதங்கள் கழித்து கிடைத்த வாய்ப்பில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளது இந்தியா மற்றும் சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. ஆனால் அவரை நேற்றைய போட்டியில் கேப்டன் ராகுல் பயன்படுத்திய விதம் நிறைய ரசிகர்கள் கடுப்பாக வைத்தது. ஏனெனில் இப்போதுதான் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவருக்கு இந்தியா வீசிய முதல் 13 ஓவர்களில் 7 ஓவர்களை அவரை மட்டுமே வீச வைத்தது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

ஏனென்றால் எடுத்த எடுப்பிலேயே தொடர்ச்சியாக அவ்வளவு ஓவர்கள் வீசினால் மீண்டும் அவர் காயமடைவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படும். மேலும் அப்படி ஆரம்பத்திலேயே முழுமூச்சுடன் வீசும் அளவுக்கு ஜிம்பாப்வே வலுவான அணியா? அல்லது அவர்கள் 100 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஏதும் அமைத்து விட்டார்களா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை அதனால் அவர் மீண்டும் காயமடைந்திருந்தால் அவரின் கேரியரே முடியும் நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம்.

கேப்டன்ஷிப் செட்டாகமாட்டார்:
ஆனால் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா போன்ற அத்தனை தரமான கேப்டன்களும் தங்களது வீரர்களின் மீது அக்கறை காட்டுபவர்களாகவே இருக்கும் நிலையில் அந்த அடிப்படை கூட தெரியாத கேப்டனாக ராகுல் செயல்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் நேற்றைய போட்டியில் 110/8 என சுருண்ட ஜிம்பாப்வேவுக்கு டெயில் எண்டர்கள் 9வது விக்கெட்டுக்கு முதல் முறையாக 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைக்கும் அளவுக்கு அவர்களை பிரிக்க முடியாமல் கேப்டன் ராகுல் திணறினார்.

ஏற்கனவே கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக கேப்டனாக அறிமுகமான அவர் இதேபோல் சுமாராக செயல்பட்டதால் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் அவமானத்தைச் சந்தித்தது. ஆனால் இங்கே பலவீனமான ஜிம்பாப்வே என்பதால் சுமாரான கேப்டன்ஷிப்பையும் தாண்டி முதல் முறையாக கேப்டனாக வெற்றியை பதிவு செய்து குளிர்காய்ந்துள்ளார். இதனால் கேஎல் ராகுல் சிறந்த பேட்ஸ்மென் ஆனால் அவர் எப்போதுமே கேப்டனாக செட்டாக மாட்டார் என்பதை இதேபோல் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement