இளம்வீரரை அரைமணி நேரம் ஓடவிட்டு கதற கதற கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்த தல தோனி – சுவாரசிய தகவல்

Dhoni
- Advertisement -

நடைபெற்றுவரும் 15-வது ஐபிஎல் தொடரானது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை ஒரு குதூகலமான தொடராக அமையவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

CSK vs RCB 2

- Advertisement -

அவரது தலைமையில் சென்னை அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகமாக காணப்பட்ட நிலையில் முதல் நான்கு போட்டிகளில் சென்னை அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. இப்படி சென்னை அணி தோல்வியை சந்திக்க பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக அனுபவமற்ற பந்துவீச்சு காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி சரியான துவக்கம் கிடைக்காதது, அதோடு சேர்த்து எளிதான பல கேட்சிகளை தவற விட்டது என காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனாலும் இறுதியாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சென்னை அணி பெங்களூரு அணியை கட்டுப்படுத்தி முதல் வெற்றியை ருசித்தது.

mukesh

எனவே இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது. அதன் காரணமாக இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி கூடுதலாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக எளிதாக கைக்கு வரும் கேட்ச்களை சி.எஸ்.கே வீரர்கள் தவற விடுவதால் கேட்ச் பிடிப்பதற்காக நீண்ட நேரம் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது கைக்கு வந்த எளிதான கேட்ச்களை சிலவற்றை முகேஷ் சவுத்ரி தவற விட்டிருந்தார். அதன் காரணமாக அவருக்கு ஏற்றவகையில் தலைமை பயிற்சியாளர் பிளமிங் கேட்ச் பயிற்சி அளித்து முடித்த வேளையில் தோனி முகேஷை மேற்பார்வையிட்டு அவரைத் தொடர்ந்து ஓடவிட்டு கேட்ச் பிடிக்க பயிற்சி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : நான் பாத்ததுலேயே பெஸ்ட் யங் பிளேயர்னா அது இவர்தான் – இளம்வீரரை பாராட்டிய மைக்கல் வாகன்

இந்த பயிற்சி கிட்டத்தட்ட அரை மணி நேரம் இடைவிடாமல் நீடித்திருக்கிறது. எனவே இனிவரும் போட்டிகளில் அவர் சரியாக செயல்பட அந்த பயிற்சியை வழங்கியுள்ளார். அதோடு இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எவ்வளவு முக்கியம் அணிக்கு வெற்றி தேவை என்பதை சரியாக அறிந்துள்ள தோனி அவருக்கு இந்த பயிற்சியை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement