
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் என 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தினை வகிக்கிறது. மேலும் இன்னும் 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மே 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியானது பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணியானது இந்த சீசனில் புதிய கேப்டன் தலைமையில் ஒன்பது ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ள வேளையில் நிச்சயம் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று கூடுதல் பலத்துடன் பிளே ஆப் சுற்றினை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள சிஎஸ்கே அணியானது லக்னோ அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்த காத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் போடுவதற்காக தனியாக பயிற்சி செய்து வருவதாக சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : டாஸ் போடுவது குறித்து தோனி என்னிடம் பேசினார். அப்போது அவர் என்னிடம் : டாஸை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நீ அதை வென்றாக வேண்டும். அதற்கு தனியாக பயிற்சி எடு என்று கூறினார்.
இதையும் படிங்க : இரண்டாவது முறையாக விதியை மீறிய ஹார்டிக் பாண்டியா.. ஒட்டுமொத்த அணிக்கும் தண்டனை விதிப்பு – விவரம் இதோ
அப்போதிலிருந்து நான் டாஸ் போடுவதை தொடர்ச்சியாக டக் அவுட்டில் ஒரு காயினை வைத்து பயிற்சி செய்து வருகிறேன். முடிந்த அளவிற்கு டாஸ் நமக்கு சாதகமாக விழும்படி காயினை சுழற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார். இதுவரை 9 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் அதில் 8 முறை டாசில் தோல்வியை சந்தித்துள்ளதாலே தோனி இப்படி ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.